கிட்மேனுக்கு பெண் குழந்தை!

ஹாலிவுட்டின் ஹாட்டஸ்ட் ஸ்டார்களில் ஒருவர் நிக்கோல் கிட்மேன். இவருக்கும். பாடகர் கீத்துக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.
இந்த நிலையில் கிட்மேன் கர்ப்பமடைந்தார். ஞாயிற்றுக்கிழமை அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதை அவரது மேனேஜர் உறுதிப்படுத்தியுள்ளார். குழந்தைக்கு அழகான பெயரையும் சூட்டி விட்டனர். ஞாயிற்றுக்கிழமை பிறந்ததால் சண்டே ரோஸ் என பெயரிட்டுள்ளனராம் (நம்ம ஊரில் அமாவாசையன்று பிறந்தால் அமாவாசை என பெயரிடுவது போல).
ஆஸ்கர் விருது பெற்றவரான கிட்மேனின் முதல் கணவர் டாம் க்ரூஸ். 2001ம் ஆண்டு இந்த ஜோடி பிரிந்தது. அதன் பின்னர் கீத்தை கரம் பிடித்தார் கிட்மேன். இப்போது அவர்களுக்கு ஒரு புதிய 'கிட்' பிறந்துள்ளது.
கங்கிராட்ஸ் கிட்!
Comments


Click it and Unblock the Notifications