பாலிவுட்டுக்கு வரத் துடிக்கும் யு.எஸ்.பாடகி

புவிவெப்ப மாற்ற விழிப்புணர்வுப் பிரசாரத்திற்காக இந்தியா வந்துள்ளார் நவோமி. இங்கு வந்தவருக்கு நம்ம ஊர் ஹீரோ சைப் அலி கான் மீது ஆர்வம் பிறந்து விட்டதாம். செம ஹாட்டாக இருக்கிறார் சைப் அலி கான் என்கிறார் நவோமி.
மேலும், இந்திப் படங்களுக்கு இசையமைக்கவும், பாடவும் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விமானத்தில் நான் வரும்போது லவ் ஆஜ் கல் படம் பார்த்தேன். அதைப் பார்த்தது முதல் சைப் அலிகானின் ரசிகையாகி விட்டேன். மிகவும் ஹாட்டான நபராக அவர் எனக்குத் தெரிகிறார்.
அப்படத்தின் இசை அருமையாக உள்ளது. என்னைப் போன்றவர்களை பாலிவுட் பயன்படுத்திக் கொள்ளுமா என்று தெரியவில்லை. பயன்படுத்திக் கொள்ள தயார் என்றால் நானும் இசையமைக்கவும், பாடல்கள் பாடவும் தயார் என்றார் நவோமி.
இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மும்பை, டெல்லி, பெங்களூர் ஆகிய நகரங்களுக்குச் சென்றுள்ள நவோமி, ஸ்ரீநகருடன் தனது பயணத்தை நிறைவு செய்தார்.


Click it and Unblock the Notifications











