'டாப்லெஸ்' மேகான் பாக்ஸ்!

By Staff

Megan Fox
ஜெனீபர்ஸ் பாடி என்ற படத்தில் கவர்ச்சிக் கன்னி மேகான் பாக்ஸ், டாப்லெஸ் ஆக நடித்துள்ளாராம்.

ஏஞ்செலீனா ஜூலிக்கு கடும் போட்டியாக உருவாகியிருக்கிறார் பாக்ஸ். ஜூலியைப் போலவே உதடும், முகச் சாயலும் இருப்பதால் பாக்ஸைத் தேடி பல பட வாய்ப்புகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

இதனால் ஜூலி எரிச்சலாகியுள்ளார். சமீபத்தில் கூட ஜூலி நடிப்பதாக இருந்த ஒரு படத்தில் பாக்ஸைப் புக் செய்ததால் ஜூலி எகிறியிருந்தார்.

உலகிலேயே மிகவும் செக்ஸியான பெண் என சமீபத்தில் தொடர்ந்து 2வது முறையாக தேர்வாகியிருந்தார் பாக்ஸ்.

இந்த நிலையில் ஜெனீபர்ஸ் பாடி என்ற படத்தில் பாக்ஸ் படு கவர்ச்சியாக நடித்துள்ளாராம். ஒரு காட்சியில் டாப்லெஸ்ஸாகவும் வருகிறாராம்.

அப்படத்தில் வரும் ஒரு காட்சியில், காட்டுக்குள் டாப்லெஸ்ஸாக அவர் திரிவதைப் போல படமாக்கியுள்ளனராம்.

இபப்டத்தில் சியல் லீடர் பெண்ணாக நடித்துள்ளாராம் பாக்ஸ்.

இதற்கிடையே, ஹாலிவுட் நடிக்ர ஜாக் எப்ரானுடன், பாக்ஸ் படு குளோஸ் ஆக பழகி வருவதாக ஒரு செய்தி கிளம்பியுள்ளது. இருவரும் சேர்ந்து சமீபத்தில் லாஸ் ஏஞ்சலெஸ் ஹோட்டல் ஒன்றில் இரவு விருந்தில் பங்கேற்றனராம்.

படு நெருக்கமாக அமர்ந்து கொண்டு இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாக ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இருவரும் காதல் கொண்டிருப்பது போல தெரிவதாகவும் அந்த செய்தி கூறுகிறது. அதேசமயம், எப்ரான், நடிகை வெனீசா ஹட்ஜன்ஸைக் காதலிப்பதாகவும், அந்தக் காதலை இன்னும் எப்ரான் விடவில்லை என்றும் கூறியுள்ளது அந்த செய்தி.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எப்ரான் தன்னை வெகுவாக ஈர்த்துள்ளதாக பாக்ஸ் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இருவரும் படு நெருக்கமாக பழகி வருவதாக வெளியாகியுள்ள செய்தியால் வெனீசா, விசனமாகியுள்ளதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X