செரீனாவின் சினிமா விருப்பம்!

உலகின் முதல் நிலை வீராங்கனையாகத் திகழ்கிறார்கள் செரீனா மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள். இவர்கள் மாடலிங்கிலும் ஈடுபட்டுள்ளனர்.
டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சினிமாவில் நடிக்கப்போவதாக செரீனா வில்லியம்ஸ் இப்போது அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "சினிமாவில் நடிப்பது எனது இன்னொரு கனவு. 2005ம் ஆண்டு நான் டெலிவிஷன் சீரியல் ஒன்றில் நடித்திருக்கிறேன். டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சினிமாவில் நடிக்கும் திட்டமுள்ளது. நடிப்பது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியை அளிக்கும். கேமிரா முன்பு நிற்பதை விரும்புகிறேன்.
குறிப்பாக ஆக்ஷன் படங்களில் நடிப்பது எனக்குப் பிடிக்கும். வில்லன்களை உதைப்பது, சேஸிங் காட்சிகளில் வேகமாக ஓடுவது மற்றும் பெண்களை மையப்படுத்தி வரும் கதைகளில் நடிக்க விரும்புகிறேன்", என்றார்.
Comments


Click it and Unblock the Notifications