twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    7 ஆயிரம் கோடி லாபம்.. தங்கையை பின்னுக்குத் தள்ளிய கிம் கர்தாஷியன்.. குளோபல் ஐகான் என பாராட்டு!

    |

    நியூயார்க்: பிரபல ரியாலிட்டி ஸ்டார் கிம் கர்தாஷியன், அழகு சாதன பொருட்களை விற்பனை செய்ததன் மூலமாக 7 ஆயிரம் கோடி வசூல் செய்துள்ளார்.

    177 மில்லியன் ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டிருக்கும், கவர்ச்சி கன்னி கிம் கர்தாஷியன், தனது தங்கை கைலி ஜென்னரை தொழில் ரீதியாகவும் முந்தியுள்ளார்.

    தனது கிம்கர்தாஷியன் வெஸ்ட் பியூட்டி (KKW) எனும் அழகு சாதன நிறுவனத்தின் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார்.

    வாழ்வில் அழகான தவறுகள்.. 2 வது திருமணம் செய்கிறாரா? பிரபல நடிகரின் முன்னாள் மனைவி அதிரடி விளக்கம்! வாழ்வில் அழகான தவறுகள்.. 2 வது திருமணம் செய்கிறாரா? பிரபல நடிகரின் முன்னாள் மனைவி அதிரடி விளக்கம்!

    கவர்ச்சி கன்னி

    கவர்ச்சி கன்னி

    அல்ட்ரா மாடல் கவர்ச்சி கன்னியாக உலகளவில் எக்கச்சக்க ரசிகர்களை ஈர்த்துள்ளார் கிம் கர்தாஷியன். ரியாலிட்டி ஷோ மூலம் அமெரிக்க ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், இன்ஸ்டாகிராமில், தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு, சுமார் 177 மில்லியன் ரசிகர்களை தனது ஃபாலோயர்களாக மாற்றி உள்ளார்.

    அழகு சாதன தொழில்

    அழகு சாதன தொழில்

    வெறும் கவர்ச்சியை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்த முடியாது என அறிந்து கொண்ட கிம் கர்தாஷியன், கடந்த 2017ம் ஆண்டு கிம் கர்தாஷியன் வெஸ்ட் பியூட்டி எனும் அழகு சாதன நிறுவனத்தை தொடங்கி, லிப்ஸ்டிக், லிப் கிளாஸ், ஐ லைனர் என பெண்கள் தலை முதல், கால் வரை பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யத் தொடங்கினார்.

    7 ஆயிரம் கோடி

    7 ஆயிரம் கோடி

    அழகு சாதனத் துறையில் அடியெடுத்து வைத்த கிம் கர்தாஷியன், வெறும் மூன்றே ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்துள்ளார். இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கோடிக்கு மேல் இதன் மதிப்பு இருக்கிறது. தங்கை கைலி ஜென்னர் மற்றும் கணவர் கேன் வெஸ்ட் ஏற்கனவே 100 பில்லியன் டாலரை தங்கள் வியாபாரத்தின் மூலம் ஈட்டிய நிலையில், கிம் கர்தாஷியனும் அந்த வரிசையில் இடம் பிடித்துள்ளார்.

    தங்கை கைலி ஜென்னர்

    தங்கை கைலி ஜென்னர்

    இளம் வயதில் உலகளவில் அழகு சாதன வர்த்தகத்தில் மிகப்பெரிய புரட்சியை கிம் கர்தாஷியனின் இளைய சகோதரி கைலி ஜென்னர் செய்திருந்தார். கடந்த ஆண்டு, கவர் கேர்ள் ஓனர் கோட்டி நிறுவனத்தின் சி.இ.ஓ பீட்டர் ஹார்ப், கைலி ஜென்னரை பாராட்டிய ‘மாடர்ன் டே குளோபல் ஐகான்' என்ற பாராட்டு தற்போது, அவர் வாயில் இருந்தே கிம் கர்தாஷியனுக்கு போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

    20 சதவீதம் லாபம்

    20 சதவீதம் லாபம்

    கடந்த ஆண்டு கிம் கர்தாஷியன் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை பெற்றிருந்த கோட்டி நிறுவனம் இந்த ஆண்டு 20 சதவீத பங்குகளை முதலீடு செய்து, கிம் கர்தாஷியனின் லாபத்தில் 20 சதவீதத்தை பெற்று சந்தோஷத்தில் இருக்கிறது. காட்டி நிறுவனத்தின் மேக்ஸ் ஃபேக்டர் மேக்கப் மற்றும் சாலி ஹான்சென் நெயில் பாலிஷ் நிறுவனங்கள் கிம் கர்தாஷியன் நிறுவனத்துடன் நடத்திய போட்டியில் வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kim Kardashian West is selling a stake in her beauty brand for USD 200 million, in a deal that values the TV reality star's three-year-old business at USD 1 billion.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X