'ஐஸை' நாடிய வில் ஸ்மித்!

ஹாலிவுட் ஸ்டார் வில் ஸ்மித் நடித்து வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது ஹான்காக். இதில் சூப்பர் ஹீரோவாக பிரமிக்கும் நடிப்பைக் காட்டியுள்ளார் வில். அவருக்கு ஜோடியாக ஆஸ்கர் விருது பெற்ற சார்லிஸ் தெரான் நடித்துள்ளார்.
இந்த நிலையில், தான் முதலில் ஐஸ்வர்யா ராயைத்தான் ஹீரோயினாக நடிக்க நாடியதாகவும், அவர் மறுத்ததால்தான் சார்லிஸை போட வேண்டியதாயிற்று என்று கூறியுள்ளார் வில் ஸ்மித்.
நான் ஐஸ்வர்யாவின் பரம விசிறி. கார்ஜியஸ் லேடி அவர். அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். ஹான்காக் நாயகியாகும் வாய்ப்பு முதலில் அவருக்குத்தான் போனது. ஆனால் அது முடியாமல் போய் விட்டது. பிறகே சார்லிஸை நாடினோம்.
இருந்தாலும் ஐஸ்வர்யாவுடன் எப்படியாவது ஜோடி சேர்ந்து விட வேண்டும் என ஆர்வமாக உள்ளேன். அவருக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக பொருந்தி வரும். அவருடன் பணியாற்ற எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன் என்றார் வில்.
இந்தியப் படங்கள் மீதும் வில் ஸ்மித்துக்கு ஆர்வம் உள்ளதாம். இந்தியப் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். சில இந்திப் படங்களை நான் பார்த்துள்ளேன். என்னை அவை மிகவும் கவர்ந்து விட்டன. கரண் ஜோஹருடன் (இயக்குநர்) பேசியும் உள்ளேன். பார்க்கலாம்.
இந்திய சினிமாவும், அதன் நடிகர், நடிகையரும் என்னைக் கவர்ந்து விட்டனர். அவர்களது எனர்ஜி லெவல் பிரமிப்பூட்டுகிறது. பாடல்கள் பிரமாண்டமாக உள்ளன என்றார் வில் ஸ்மித்.
உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள ஸ்மித்தின் ஹான்காக், ஜூலை 11ம் தேதி இந்தியா முழுவதும் திரைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











