சின்டிக்கு 'ஃபிகர்' ஓ.கே.!

2 குழந்தைகளுக்குத் தாயான சின்டிக்கு ஹாலிவுட்டில் இன்னும் மவுசு குறையவில்லை. இருந்தாலும் இவரது உடல் அமைப்பும், இளமைப் பொலிவும் குறையத் தொடங்கியுள்ளதாக சிலர் கூறுவதால் சற்றே கவலை அடைந்தாலும் அதற்காக எந்தவிதமான ட்ரீட்மென்ட்டையும் தான் செய்யப் போவதில்லை என்கிறார் சின்டி.
போட்டோக்ஸ் டிரை செய்து விட்டேன். பிடிக்கவில்லை. பிளாஸ்டிக் சர்ஜரியை நினைத்தாலே டென்ஷனாகி விடுகிறது. எனவே நிச்சயம் எனது அழகை கூட்ட பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவே மாட்டேன்.
இதெல்லாம் நமது முகத்தையும், அழகையும் பாதிக்காத வரை ஓகேதான். இருந்தாலும் எனக்கு இப்போதுள்ள அழகும், எழிலும் போதும் என்று நினைக்கிறேன்.
எனது உடல் அமைப்பும், தோற்றப் பொலிவும் என்னைப் பொறுத்தவரை திருப்திகரமாகவே உள்ளது என்கிறார் அடக்கமாக.
சின்டிக்கு வயது 44 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வயதில் இளமை இன்னும் இருப்பதே சந்தோஷமான விஷயம்தானே...!


Click it and Unblock the Notifications











