புதிய காட்சிகளுடன் 'அவதார்' மறு அவதாரம்!

பெரும் பொருட் செலவில் ஜேம்ஸ் காமரூன் இயக்கிய அட்டகாசமான படம் அவதார். உலகம் முழுவதும் பெரும் வசூலையும், வரவேற்பையும் வாரிக் குவித்த படம் அவதார். ஆஸ்கர் விருதுகளையும் கூட அள்ளியது.
இந்த நிலையில் தற்போது படத்தை முழு அளவில் 3டி தொழில்நுட்பத்தில் மாற்றியுள்ளனர். மேலும், புதிதாக 8 நிமிட பிரமாண்ட காட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளனவாம். இந்த புதிய அவதாரத்துடன் கூடிய அவதார் வருகிற ஆகஸ்ட் 27ம் தேதி உலகம் முழுவதும் மீண்டும் ரிலீஸாகிறது.
இப்படத்தின் 3 டி தொழில்நுட்பத்திற்குப் பொருந்தக் கூடிய தியேட்டர்களில் மட்டுமே இப்படத்தைக் காண முடியும்.
சாதாரண அளவிலேயே பிரமாண்டமாக இருந்த அவதார் தற்போது 3டி அவதாரத்துடன் வருவதால் ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் கிளம்பியுள்ளது.
Comments
avatar அவதார் திரைப்படம் ஜேம்ஸ் காமரூன் புதிய காட்சிகளுடன் அவதார் ஹாலிவுட் படம் hollywood movie avatar james cameroon new scenes


Click it and Unblock the Notifications