'ஸ்கைலைன்': தமிழுக்கு வரும் வேற்று கிரகவாசிகள் கதை!

குறிப்பாக இவற்றை தமிழில் டப் செய்வதால் மொழிப் பிரச்சினையின்றி அனைவருமே ரசிக்க முடிகிறது.
அந்த வகையில் ஆங்கிலத்தில் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான 'ஸ்கைலைன்' இப்போது தமிழுக்கு வருகிறது. வேற்று கிரகத்தில் வசிக்கும் மனிதர்களைப் போன்ற உயிரினங்கள் பற்றிய கதை.
நாசா விஞ்ஞானிகள் வேறு கிரகங்களில் மனிதர்கள் இருக்கிறார்களா என்று விண்கலங்களை அனுப்பி ஆய்வில் ஈடுபடுகின்றனர்.
அப்போது திடீரென வேறு கிரகத்தில் வசிக்கும் ஏலியன்கள் பூமிக்கு படையெடுத்து வருகின்றன. இங்குள்ள மனிதர்களை கூட்டம் கூட்டமாய் அள்ளிக் கொண்டு விண்ணுக்கு பறக்கின்றன. அந்த மனிதர்கள் அங்கு என்ன ஆனார்கள் என்பது மர்மமாக உள்ளது.
கதாநாயகனும், நாயகியும் ஏலியன்களை எதிர்த்து நிற்கிறார்கள். அவர்கள் வென்றார்களா? என்பது கிளைமாக்ஸ்.
கோலின், கிரிக்ஸ்ட்ராங் பிரதர்ஸ் இணைந்து இயக்கியுள்ளனர். எரிக் பல்பர், டோனால்டு பெய்சன், பிரிட்டனி டேனி, டேவிட் சயா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 12-ந்தேதி தமிழிலும், ஆங்கிலத்திலும் ரிலீசாகிறது.


Click it and Unblock the Notifications