கேத்தி பெர்ரிக்கு இந்தியாவில் கல்யாணம்

By Staff

Katy Perry
பாப் அழகி கேத்தி பெர்ரி, இந்தியாவில் வைத்து மணம் புரியவுள்ளாராம். இந்த ஆண்டு இறுதியில் திருமணமாம்.

கடந்த நான்கு மாதமாக காதலித்து வரும் ருஸ்ஸல் பிராண்டைத்தான் கேத்தி பெர்ரி மணம் புரியவுள்ளார். இந்தத் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும், அதில் இசை நிகழ்ச்சியை நடத்துமாறும் தனது தோழியும் பாப் பாடகியுமான ரிஹானாவைக் கேட்டுக் கொண்டாராம் கேத்தி. அதை உடனே ஏற்றுக் கொண்டாராம் ரிஹானா.

இதுகுறித்து அவர் கூறுகையில், தங்களது திருமணத்தைப் பற்றிக் கூறிய கேத்தி, அதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். நானும் உடனே ஒப்புக் கொண்டேன்.

இந்தியாவில் திருமணம் என்பது மிகப் பெரிய விழா போல கொண்டாடப்படுகிறது. அது எனக்குப் பிடிக்கும். எனவேதான் உடனே ஒத்துக் கொண்டேன்.

இப்போது கேத்திக்காக ஒரு பார்ட்டி கொடுக்கத் திட்டமிட்டு வருகிறேன். கல்யாணத்திற்கு முன்பு இதுபோன்ற பார்ட்டி அவசியம் தேவைதான் என்கிறார் ரிஹானா.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஜெய்ப்பூர் நகருக்கு கடந்த ஜனவரி மாதம் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக வந்தபோதுதான் கேத்திக்கும், ருஸ்ஸலுக்கும் இடையே காதல் மலர்ந்த்து என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X