லோஹனுக்கு 'கர்வ்' காலி!

22 வயதாகும் லோஹன் இப்போது தயிர்வடை தேசிகன் சைஸுக்கு மாறி விட்டார். படு ஒல்லிக் குச்சியாக மாறி விட்ட அவரிடம், முன்பு இருந்த அழகிய செக்ஸியான வளைவுகளை உடலில் காண முடியவில்லை.
அவர் அணியும் உடைகள் எல்லாம் ஏதோ ஹேங்கரில் மாட்டப்பட்ட டிரஸ் போலத்தான் தொங்கிக் கொண்டுள்ளன.
தனது 15 வயது தங்கச்சி அலியுடன், லாஸ் ஏஞ்செலஸிஸ் ஷாப்பிங்குக்கு வந்த லோஹனைப் பார்த்து பலரும் வியந்து போய் விட்டனர். நம்ம லோஹனா என்று அவர்களுக்கு குழப்பம். அப்படி ஆளே மாறிப் போய் காணப்பட்டார் லோஹன்.
சைஸ் ஸீரோ என்ற மகா மோசமான பழக்க வழக்கம் இப்போது லோஹனை மட்டுமல்ல, உலக நடிகைகள், மாடல் அழகிகளை வாட்டி வதைத்து வருகிறது.
சைஸ் ஸீரோவை எட்ட வேண்டும் என்பதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து வந்தார் லோஹன். அதன் விளைவாக ஒல்லிக் குச்சி உடம்புக்காரியாகி விட்டார்.
லோஹனைப் பார்த்தாலே பாவமாக இருக்கிறது, ஏதோ ரொட்டியே கிடைக்காமல் பட்டினியில் வாடுபவரைப் போல இருக்கிறார் என்று கடைக்கு வந்த ஒரு வாடிக்கையாளர் கிண்டலடித்தபடி சென்றாராம்.


Click it and Unblock the Notifications











