மடோனாவின் புதிய சாதனை!

இதன்மூலம் தொடர்ந்து 10 சூப்பர்ஹிட் ஆல்பங்களைக் கொடுத்த அரிய இசைக் கலைஞர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளார் மடோனா.
இதற்கு முன் தி பீட்டில்ஸ் குழு 15 சூப்பர் ஹிட் ஆல்பங்களைக் கொடுத்துள்ளது. பிரபல இசைக் கலைஞர் பிரெஸ்லி 11 ஆல்பங்களைக் கொடுத்துள்ளார். இவர்கள் இருவருக்குப் பிறகு இப்போது மடோனா மட்டுமே அந்த அரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.
பிரிட்டன், அமெரிக்கா உள்பட பல நாடுகளிலும் இசை ஆல்பம் விற்பனையில் இப்போது முதலிடத்தில் இருப்பது மடோனாவின் ஹார்ட் கேண்டிதான்.
ஆனாலும் பாப் இசையின் முடிசூடா மன்னனான மைக்கேல் ஜாக்ஸன் சாதனையை மட்டும் இன்று வரை யாராலும் நெருங்க முடியவில்லை.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வெளியான அவரது த்ரில்லர் ஆல்பம்தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையில், (50 லட்சத்துக்கும் அதிகமாக) இசைத்தட்டுகளாக விற்பனையானது. இன்றுவரை அது கின்னஸ் சாதனை!


Click it and Unblock the Notifications











