இளவரசியின் மறு பிறவியா ஜாக்சன்?

By Staff

Egyptia MJ
எகிப்து நாட்டு இளவரசியின் மறு பிறவிதான் மைக்கேல் ஜாக்சன் என்று ஒரு செய்தி கிளம்பியதால் புதுப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜாக்சன் உயிருடன் இருந்தபோதும் அவரைப் பற்றியும், அவரைச் சுற்றியும் ஏகப்பட்ட சர்ச்சைகள், செய்திகள். இறந்த பின்னரும் கூட அது ஓயவில்லை. தினசரி ஒரு புதுப் புது செய்தி ஜாக்சன் குறித்து வந்தவண்ணம் உள்ளது.

இந்த நிலையில் ஜாக்சன், எகிப்து நாட்டு இளவரசியின் மறு பிறவி என்று ஒரு புதுச் செய்தி கிளம்பவே அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள அருங்காட்சியகத்தி்ல ஒரு எகிப்து நாட்டு இளவரசியின் புராதன சிலை உள்ளது. இந்த சிலையைப் பார்த்தவர்கள் அப்படியே நின்று போய் விட்டனர். காரணம், இந்த சிலை அப்படியே அச்சு அசல், ஜாக்சனைப் போலவே இருப்பதால்.

இதையடுத்து எகிப்து இளவரசியின் மறு பிறவிதான் ஜாக்சன் என்று அவரது ரசிகர்கள் செய்தி கிளப்பி வருகின்றனர். மேலும், அந்த அருங்காட்சியகத்திற்கும் ரசிகர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். சிலையைப் பார்க்கும் அவர்கள், நிச்சயம் ஜாக்சன் இந்த இளவரசியின் மறு பிறவிதான் என்று அடித்துக் கூறுகின்றனர்.

இதுகுறித்து அருங்காட்சியகத்தின் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், ஜாக்சன் இந்த மியூசியத்திற்கு வந்திருப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் இந்த சுண்ணாம்புக் கல் பெண்ணின் சிலை அப்படியே ஜாக்சன் போல்தான் உள்ளது. இது 3000 ஆண்டுகள் பழமையான சிலையாகும் என்றார்.

உடல் அடக்கம் செய்யப்பட்டது

இப்படி சர்ச்சைகள், புதுப் புது கதைகள் ஒருபக்கம் இருக்க ஜாக்சனின் உடல் ஒரு வழியாக நிரந்தரமாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஹாலிவுட்டில் உள்ள பாரஸ்ட் லான் கல்லறைத் தோட்டத்தில் ஜாக்சன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கல்லறைத் தோட்டத்தில் எந்த இடத்தில் ஜாக்சன் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அது தெரிந்தால் ரசிகர்கள் குவிந்து விடுவார்கள் என்பதால் இந்த ஏற்பாடு. ஜாக்சனின் குடும்பத்தினர் மற்றும் கல்லறைத் தோட்ட நிர்வாகிகளுக்கு மட்டுமே ஜாக்சன் உடல் புதைக்கப்பட்டுள்ள இடம் தெரியுமாம்.

ஒரு வேளை எதிர்காலத்தில் இந்த விஷயம் வெளியே தெரிந்து அதிக அளவில் இங்கு கூட்டம் கூடத் தொடங்கினால், ஜாக்சன் உடலை மீண்டும் வேறு இடத்திற்கு மாற்றும் திட்டத்தை வைத்துள்ளனராம் ஜாக்சன் குடும்பத்தினர்.

உடலுடன் சேர்ந்த மூளை ...

இந்த நிலையில், பிரேதப் பரிசோதனையின்போது தனியாக எடுக்கப்பட் ஜாக்சனின் மூளை, கடந்த வாரம் அவரது உடலுடன் சேர்த்து வைக்கப்பட்டு விட்டதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X