மிஷன் இம்பாஸிபல்-4...மீண்டும் டாம் க்ரூஸ்!

1996ம் ஆண்டு வெளியான மிஷன் இம்பாஸிபல் மற்றும் அதன் அடுத்தடுத்த பாகங்களில் நடித்தவர் டாம் க்ரூஸ்.
இப்போது அந்தப் படத்தின் நான்கு பாகம் தயாராகிறது. பாரமவுண்ட் பிக்சர்ஸுக்காக ஜேஜே ஆப்ராம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிக்க டாம் க்ரூஸ் ஒப்பந்தமாகியுள்ளார். இத்தகவலை பாரமவுண்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் படம் 2011ல் வெளியாகும். ஆனால் இன்னும் இயக்குநர் யார் என்பது மட்டும் முடிவாகவில்லையாம்.
டாம் க்ரூஸ் சமீபத்தில்தான் நைட் அண்ட் டே படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜூலையில் வெளியாகிறது இந்தப் படம்.
Comments
ஹாலிவுட் மிஷன் இம்பாஸிபிள்-4 பாரமவுண்ட் பிக்சர்ஸ் டாம் க்ரூஸ் tom cruise mission impossible seqel hollywood


Click it and Unblock the Notifications