தற்கொலை மனோபாவத்தில் லின்ட்சே?

Lindsay Lohan
தற்கொலை செய்து கொள்ளும் மனோபாவத்துடன் லின்ட்சே லோஹன் இருப்பதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளதால் ஹாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹாலிவுட் நடிகையான லின்ட்சே லோஹன் சமீபத்தில் தனது தந்தை மைக்கேலை விட்டுப் பிரிந்தார். அது முதல் அவர் மன உளைச்சலில் இருப்பதாகவும், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் அவர் தவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து லோஹனின் உவியாளர் ஜென்னி முரோ, மைக்கேலுக்குப் போன் செய்து இதைத் தெரிவித்துள்ளார்.

லோஹனின் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படாவிட்டால் நிச்சயம் அவர் தனது உயிரை மாய்த்துக் கொள்வார் என்றும் ஜென்னி அச்சம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜென்னி மைக்கேலிடம் பேசுகையில், உங்களது மகளைக் காப்பாற்ற நான் தினசரி போராட வேண்டியுள்ளது. அவர் பெரும் குழப்பத்தில் உள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மகிழ்ச்சிகரமான லோஹனாக தற்போது அவர் இல்லை. நான் அவரை விட்டு சிறிது நேரம் அகன்றால் கூட அவருக்கு ஆபத்து நேரிடலாம்.

உங்களது மகளைக் காப்பாற்றுவதற்காக நான் எல்லாவற்றையும் விட்டு விட்டு அவருடனேயே இருக்கிறேன். எனது காதலரைப் பிரிந்து விட்டேன். எனது நாயை விட்டு விட்டு வந்து விட்டேன். எனது பெற்றோரைப் பிரிந்து விட்டேன். லாஸ் ஏஞ்சலெஸில் புதிதாக வாங்கியுள்ள எனது வீட்டுக்குக் கூட போக முடியாத நிலையில் உள்ளேன்.

தற்போது சமந்தா ரான்சனுடன் லோஹனுக்கு உள்ள முறை கெட்ட உறவு அவரை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்று கூறியுள்ளார் ஜென்னி.

ஆனால் லோஹன் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். அது அவரது உயிரைக் குடித்து விடும் என்று லோஹனின் தந்தை மைக்கேல் குற்றம் சாட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X