மடோனா கொடுத்த பெர்மிஷன்!

By Staff

Madonna
தனது முன்னாள் கணவர் கய் ரிச்சி, தனது குழந்தைகளைப் பார்க்க பாப் பேரரசி மடோனா அனுமதி அளித்தார். இதையடுத்து கய் ரிச்சி தனது மகன்கள் ராக்கோ மற்றும் டேவிட்டை பார்த்து நெக்குருகி பாசத்தைக் கொட்டி, கொஞ்சி மகிழ்ந்தார்.

பாப் உலகின் முடி சூடா ராணியாக திகழ்கிறார் மடோனா. இவரது கணவராக இருந்தவர் கய் ரிச்சி. இப்போது இருவரும் பிரிந்து விட்டனர். இந்தத் தம்பதியின் மகன் ராக்கோ. டேவிட் என்ற இன்னொரு மகனை மலாவியிலிருந்து கடந்த 2006ம் ஆண்டு இருவரும் தத்தெடுத்துக் கொண்டனர்.

கடந்த மாதம்தான் இருவருக்கும் விவாகரத்து கிடைத்தது. இந்த நிலையில் தனது மகன்களைப் பார்க்க கய் ரிச்சி விரும்பினார்.

தனது விருப்பத்தை மடோனாவுக்கு தெரிவித்தார் ரிச்சி. அதைப் பரிசீலித்த மடோனா, பல்வேறு நிபந்தனைகளைப் போட்டார். இதற்கு ஒத்து வந்தால் பிள்ளைகளைப் பார்க்கலாம் என கூறினார்.

லண்டனில் மட்டுமே குழந்தைகளைப் பார்க்கலாம், குழந்தைகளை டிவி பார்க்க அனுமதிக்கக் கூடாது, ஆர்கானிக் அல்லாத உணவு வகைகளைக் கொடுக்கக் கூடாது என்பவை மேடம் மடோனா போட்ட நிபந்தனைகளில் சில.

இதை ஏற்றுக் கொண்டார் ரிச்சி. இதைத் தொடர்ந்து குழந்தைகளைப் பார்க்க வரலாம் என பெர்மிஷன் கொடுத்தார் மடோனா. அதன் படி ரிச்சியும், வந்து குழந்தைகளைப் பார்த்தார்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்தித்துக் கொண்டதால், குழந்தைகள் இருவரும் ரிச்சி மீது பாசத்தைப் பொழிந்து தள்ளி விட்டனராம்.

8 வயதாகும் ராக்கோ, தனது தந்தையின் தோளில் கை போட்டபடி தோட்டத்தை வலம் வந்து மகிழ்ந்தானாம். அதேபோல டேவிட் மீதும் பாசத்தைப் பொழிந்துள்ளார் ரிச்சி.

பாசத்திற்கு எல்லா இடத்திலும் ஒரே நிறம்தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X