'பேவாட்ச்' பமீலாவுக்கு நான்காவது திருமணம்

கனடாவில் பிறந்த நடிகை பமீலா ஆண்டர்சன் துவக்கத்தில் ஹாலிவுட்டில் தான் நடித்தார் என்றாலும் அவருக்கு பேரும் புகழும் பெற்று தந்தது 1992ல் வெளிவந்த 'பேவாட்ச்' டிவி தொடர் தான்.
இதை தொடர்ந்து ஹாலிவுட்டிலும் வெற்றிகள் குவி்ந்தன. ஆனால், சினமா வாழ்க்கைக்கு நேர் மாறாக இவரது திருமண வாழ்க்கை தொடர்ந்து தோல்வியை சந்தித்து. ஒரு முறை, இரு முறை அல்ல மூன்று முறை திருமணம் செய்து கொண்டு பின்னர் விவகாரத்து பெற்றார்.
இவரது முதல் கணவர் பிரபல டிரம்ஸ் இசைக்கலைஞர் மோட்லே டாமி லீ. இவர்களுக்கு பிரான்டன் (12), டைலன் (11) என இரண்டு குழந்தகள் பிறந்த நிலையில் அவரை விவாகரத்து செய்தார். இவரை தொடர்ந்து ராப் பாடகர் கிட் ராக் மற்றும் சமூக சேவகர் ரிக் சாலமன் ஆகியோர் மணந்து பின்னர் விவகாரத்து பெற்றார்.
தற்போது 41 வயதான நிலையில் பமீலா நான்காவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளிவந்தன. இந்த ரகசியத்தை முதலில் கசியவிட்டவர், பமீலாவின் உடை தயாரிப்பளரும், பிரபல பேஷன் டிசைனரான ரிச்சி ரிச் தான்.
மியாமியில் நடந்த பார்ட்டி ஒன்றில் பங்கேற்ற ரிச்சி சக விருந்துனர்களிடம் பமீலாவுக்கு தான் புதிய திருமண உடைகளை டிசைன் செய்து வருவதை போட்டு உடைத்துள்ளார். பமீலா ஆழ்கடல் நீச்சல்வீரரான ஜேமி பட்கெட் என்பவருடன் டேட்டிங் செய்து வருவதை அடுத்து அவரை தான் திருமணம் செய்ய போகிறார் என கூறியுள்ளார்.
இது குறித்து பமீலா கூறுகையில், எனது இரண்டு மகன்களுக்கு ஜேமியை மிகவும் பிடித்துவிட்டது. அதனால் தான் இந்த திருமண ஏற்பாடு என்றார்.


Click it and Unblock the Notifications











