twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாதங்கியின் பாடல்களுக்குத் தடையா? - இலங்கை அரசு மறுப்பு

    By Chakra
    |

    MIA
    கொழும்பு: பிரபல பாப் இசைப் பாடகி மாதங்கியின் பாடல்களை இணையதளத்தில் தடுக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை என்று இலங்கை அறிவித்துள்ளது.

    பாப் இசை ரசிகர்களால் எம்.ஐ.ஏ. என்ற அடைமொழியில் அழைக்கப்படும் மாதங்கி, பிரிட்டன் குடியுரிமை பெற்றவர். திருமணத்திற்கு பின் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான இவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர் என்று இலங்கை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

    இந்த அடிப்படையில் இலங்கை அரசு தனக்கு எதிராக சர்வதேச அளவில் பிரச்சாரகம் செய்து வருவதாகவும், யூ டியூப் விடியோ இணையதளத்தில் உள்ள தமது பாடல்களை இலங்கை மக்கள் பார்வையிட முடியாத வகையில் இலங்கை அரசு தடுத்துள்ளதாக மாதங்கி குற்றம்சாட்டியிருந்தார்.

    இந்நிலையில், அவரது குற்றச்சாட்டுகள் தவறானது என்று இலங்கை தொலைத்தொடர்பு கட்டுபாட்டு துறையின் ஆணையர் அனுஷ பெல்பிட்ட கூறியுள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், "இணையத்தில் மாதங்கியின் பாடல் காட்சிகளை தடுக்கவில்லை. 'யூ டியூப்' இணையதளத்தில் இருந்து அவரது பாடல்கள் எதுவும் அகற்றப்படவில்லை. அத்தகைய தொழில்நுட்பம் இலங்கையில் கிடையாது" என்றும் அவர் கூறினார்.

    ஏற்கெனவே இலங்கையில் சில முக்கிய தமிழ் இணைய தளங்கள், விடுதலைப் புலிகள் ஆதரவு இணையதளங்களைப் பார்க்க முடியாத நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X