பமீலா - ஜாக்சன் டேட்டிங்?

எல்விஸ் பிரஸ்லிக்குப் பிறகு பாப் உலகின் முடி சூடா மன்னனாக திகழ்பவர் ஜாக்சன். இவரது ஆட்டமும், பாட்டும், பல கோடி இளைஞர்களை பைத்தியமாக்கிய இசை வயாகரா.
சில ஆண்டுகளுக்கு முன் ஓரினச் சேர்க்கை சிக்கலில் மாட்டி பெரும் அவஸ்தைக்குள்ளானார் ஜாக்சன். இந்த நிலையில் புதிதாக ஒரு சலசலப்பு செய்தியில் அடிபட ஆரம்பித்துள்ளார் ஜாக்சன்.
அவரையும் பே வாட்ச் புகழ் பமீலாவையும் இணைத்து வரும் செய்திகள்தான் இவை. ஜாக்சனும், பமீலாவும் இணைந்து உலா வருவதாகவும், இருவருக்கும் இடையே காதல் தீ பற்றிக் கொண்டுள்ளதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இருவரும் முதன் முதலில் மாலிபு தீவில்தான் தனிமையில் சந்தித்துக் கொண்டனராம். இருவரும் மாலிபு தீவுக்கு தனித் தனியாக வந்துள்ளனர். அங்குள்ள ஷட்டர்ஸ் ஹோட்டலில் தங்கியுள்ளனர் - தனித் தனியாக.
ஜன நடமாட்டத்தை ஜாக்சன் விரும்பாதவர் என்பதால் ஆளரவமற்ற பகுதியில் இருவரும் டேபிள் கேட்டு அங்கு அமர்ந்து மணிக்கணக்கில் மது பேசிக் கொண்டிருந்தனராம். பமீலாதான் நிறையப் பேசினாராம். அவர் பேசியதை ஜாக்சன் அமைதியாகவும், புன்னகையுடனும் கேட்டுக் கொண்டிருந்தாராம்.
இந்த சந்திப்பு ஜாக்சனுக்கு சந்தோஷத்தைத் தந்து விட இரண்டாவது முறையாக டேட்டிங் போகலாமா என்று அவர்கேட்டபோது பமீலாவுடன் உற்சாகத்துடன் ஓ.கே. சொன்னாராம். இப்படியாக தொடர்ந்து சந்திப்புகள் நடந்து கொண்டிருக்கிறதாம்.
இதென்ன கலாட்டா என்று பமீலாவிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. ஜாக்சன் தனது ஆல்பத்தில் நான் இடம் பெற வேண்டும் என்று விரும்பினார். இதனால், ஆல்பம் தொடர்பாக அவரை சந்தித்தேன், பேசினேன். இதுதப்பா.
ஜாக்சன் ஒரு சுவாரஸ்யமான மனிதர். அவரைப் போன்று பல சுவாரஸ்யமான மனிதர்களுடன் எனக்கு நட்பு உள்ளது. இதனால்தான் எனது வாழ்க்கையும் சுவாரஸ்யமாக உள்ளது என்கிறார் பமீலா.
கேட்கவே ரொம்ப சுவாரஸ்யமாக இருக்குல்ல?


Click it and Unblock the Notifications











