மைக்கேல் ஜாக்சன் மனைவிகள் நீதிமன்றத்தில் சாட்சியம்

பாப் இசையுலகின் முன்னணி கலைஞர் மைக்கேல் ஜாக்ஸன் கடந்த ஆண்டு ஜூன் 25-ம் தேதி திடீர் மரணம் அடைந்தார். இந்த மரணத்துக்கு காரணமானவர் என, ஜாக்ஸனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கான்ராட் முர்ரே மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமான மாத்திரைகளை இவர் ஜாக்ஸனுக்கு கொடுத்ததே இதற்குக் காரணமென தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில், மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் மனைவிகளான டெப்பி ரோவோ, லிசா மேரி பிரஸ்லி ஆகியோர் சாட்சியம் அளிக்க உள்ளனர்.
அதில், ஜாக்சன் தொடர்பாக இதுவரை வெளிவராத பல தகவல்களை அவர்கள் தெரிவிக்கலாம் என்பதால், இந்த வழக்கு பரபரப்புக்குள்ளாகியுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications