ஷகீரா பாட்டும், ஆட்டுக் கத்தலும்!

Shakira
காட்டுக் கத்தல் என்று கூறுவதை கேட்டிருக்கிறோம். ஆட்டுக் கத்தல் என்று கேள்விப்பட்டுள்ளீர்களா. ஷகீரா இளம் வயதில் பாடும்போதுதான் அப்படித்தான் மற்றவர்கள் விமர்சிப்பார்களாம்.

கொலம்பியாவைச் சேர்ந்த பாடகி, பாடலாசிரியை, நடனக் கலைஞர் என பன்முகம் கொண்ட ஷகீராவுக்கு உலகெங்கும் ஏகப்பட்ட ரசிகர்கள். அவரது நடன அசைவுக்கும், குரல் இனிமைக்கும் ரசிகர்கள் எக்கச்சக்கம்.

ஆனால் ஒரு காலத்தில் ஷகீரா பாடினாலே பலரும் நக்கலும், நையாண்டியும் செய்வார்களாம். இதுகுறித்து ஷகீரா கூறுகையில், நான் டீன் ஏஜ் பெண்ணாக இருந்தபோது, நான் பாடினால் உடனே ஆடு கத்துவது போலவே இருக்குல்ல என்று கிண்டலடிப்பார்கள்.

பள்ளியில் படித்தபோது ஒரு முறை கூட பள்ளி இசைக் குழுவில் என்னை சேர்த்ததே இல்லை. எனது மியூசிக் டீச்சருக்கு எனது குரலே பிடிக்காது. இதனால் நான் எப்போதும் சோகமாகவே இருப்பேன்.

ஆனால் டீச்சர் செய்ததும் சரிதான். அப்போது எனது குரல் சற்று கரகரப்பாகத்தான் இருக்கும். இருந்தாலும் நான் விடவில்லை. தொடர்ந்து பாடி வந்தேன். இதன் மூலம் எனது குரல் முன்னேற்றம் கண்டது. இன்று உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்கள் என்கிறார் பெருமிதத்துடன்.

ஷகீராவுக்கு சமீபத்தில் ஒரு ஆசை வந்துள்ளதாம். கடந்த 9 வருடங்களாக காதலித்துக் கொண்டிருக்கும் ஆன்டோனியா டி லா ருவாவுடன் இணைந்து குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த ஆசையாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X