ஏஞ்ஜெலீனா 'கிளியோபாட்ரா' ஆவது எப்போது?

By Sudha

Angelina Jolie
உதட்டழகி ஏஞ்ஜெலீனா ஜூலி நடிக்கவுள்ள கிளியோபாட்ரா படம் இந்த ஆண்டு தொடங்கப்படாது என்று தெரிகிறது.

ஹாலிவுட் உதட்டழகி ஏஞ்ஜெலீனா ஜூலியை நாயகியாக வைத்து கிளியோபாட்ரா படத்தை உருவாக்கவுள்ளார் கேமரூன். மிகப் பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்த ஹாலிவுட் பிதாமகன் கேமரூன். அவரது லேட்டஸ்ட கலக்கலான அவதார் இன்றளவும் உலகமெங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவதார்-2 படத்தை கையில் எடுத்துள்ளார் கேமரூன்.

அதற்கான பல்வேறு முக்கிய வேலைகளில் அவர் தீவிரம் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் ஜூலியை வைத்து இயக்கவுள்ள கிளியோபாட்ராவை இந்த ஆண்டு தொடுவதில்லை என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார்.

2011 ஜனவரியில் அவதார்-2 படப்பிடிப்பைத் தொடங்கும் கேமரூன், அதை முடித்து 2014ல் படத்தை திரைக்குக் கொண்டு வருகிறார். பின்னர் 2015ம் ஆண்டிலேயே அவர் அவதார்-3 படத்தையும் தொடங்கவுள்ளார்.

எனவே கிளியோபாட்ரா எப்போது உருவாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும் இடைப்பட்ட கேப்பில் அவர் கிளியோபாட்ரா பக்கமும் தனது பார்வையைத் திருப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X