'அன்கூல்' ஜூலி -பாயும் ஜெனீபர்!

ஏஞ்செலினா ஜூலியின் இப்போதைய கணவரான பிராட் பிட், முன்பு ஜெனீபரின் கணவராக இருந்தவர். ஒரு படத்தின் ஷூட்டிங்கின்போது ஜூலிக்கும், பிராட் பிட்டுக்கும் பற்றிக் கொண்டது. ஆனால் அப்போது ஜெனீபரை விவாகரத்து செய்யாமல் இருந்தார் பிட். பின்னர் விவாகரத்து செய்து விட்டு ஜூலியைக் கைப்பிடித்தார் பிட்.
இந்த நிலையில் இத்தனை காலத்திற்குப் பிறகு ஜூலி மீது பாய்ந்துள்ளார் ஜெனீபர்.
வோக் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ஏஞ்செலினா ஜூலி செய்தது மிகவும் அன் கூல். பிராட் பிட்டுடன் நான் விவாகரத்து செய்யாமல் இருந்த போதே அவரை தனது காதல் வலையில் வீழ்த்தி அநாகரீகமாக நடந்து கொண்டார் ஜூலி.
அவர் செய்தது நிச்சயம் சரியான செயலல்ல. நானும், பிராட் பிட்டும், கணவர், மனைவி என்று தெரிந்தும் கூட பிட்டை அவர் காதலிப்பதாக கூறியது சரியா?.
2005ம் ஆண்டு மிஸ்டர் அன்ட் மிஸஸ் ஸ்மித் படப்பிடிப்பின்போது பிராட் பிட்டுக்கும், ஜூலிக்கும் இடையே காதல் மலர்ந்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாமல் போய் விட்டது.
2 ஆண்டுகளுக்கு முன்புதான் இதுகுறித்து ஜூலி ஒரு பேட்டியில் தெரிவித்தபோது, எனக்கே தெரிய வந்தது என்று கூறியுள்ளார் ஜெனீபர்.
ஆனால் ஜூலியும், பிராட் பிட்டும் அளித்திருந்த முந்தைய பேட்டி ஒன்றில், ஜெனீபரை பிட் விவாகரத்து செய்த பின்னர்தான் தங்களுக்குள் காதல் மலர்ந்ததாக தெரிவித்திருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
தாங்கள் விவாகரத்து செய்து விட்டாலும் கூட தொடர்ந்து நல்ல தொடர்பி்ல் இருப்பதாக பிராட் பிட் குறித்து ஜெனீபர் தனது பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார்.
பிராட் பிட் குறித்து நான் பெருமைப்படுகிறேன். அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவரை நான் ஒருபோதும் வெறுக்கவில்லை. அவருக்குக் குழந்தைகள் பிறந்தபோது நான் வாழ்த்து கூறி மெயில்கள் அனுப்பினேன் என்று கூறியுள்ளார் ஜெனீபர்.


Click it and Unblock the Notifications











