விபத்தில் சிக்கினார் பிரிட்னி

சனிக்கிழமை இரவு 8.20 மணிக்கு இந்த விபத்து நடந்தது. லாஸ் ஏஞ்செலஸ் ப்ரீவே சாலையில் பிரிட்னியின் கார் போய்க் கொண்டிருந்தது. அப்போது அவரது காரும், இன்னொரு காரும் மோதிக் கொண்டன.
இருப்பினும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கலிபோர்னியா நெடுஞ்சாலை கண்காணிப்பு காவல்துறை அதிகாரி பாட்ரிக் கிம்பல் கூறியுள்ளார்.
விபத்து நடந்தபோது பிரிட்னி காரை ஓட்டினாரா என்பது தெரியவில்லை. அதேசமயம், விபத்தில் சிக்கிய இரு கார்களில் எந்தக் காரில் பிரிட்னி இருந்தார் என்பதும் போலீஸாருக்குத் தெளிவாகத் தெரியவில்லையாம்.
இந்த விபத்து தொடர்பாக இதுவரை யார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லையாம். உரிய விசாரணைக்குப் பின்னரே வழக்குப் பதிவு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சர்ச்சையாக சிக்கி வரும் பிரிட்னி இப்போது சாலை விபத்தில் சிக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











