பாத்திமா புட்டோ-குளூனி காதல்!

By Staff

Fatima Bhutto
மறைந்த பெனாசிர் பூட்டோவின் தம்பி முர்டஸா பூட்டோவின் மகள் பாத்திமா பூட்டோவின் மீது ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனி காதல் கொண்டுள்ளார். ஆனால் வயது வித்தியாசத்தை காரணம் காட்டி இந்தக் காதலை ஏற்பதில் தயக்கம் காட்டி வருகிறாராம் பாத்திமா பூட்டோ.

தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பெனாசிர் பூட்டோவின் தம்பி முர்டஸா பூட்டோ. முன்பு பெனாசிர் ஆட்சியில் இருந்தபோது முர்டஸா, சந்தேகத்திற்கிடமான முறையில் கொல்லப்பட்டார். இவரைக் கொன்றது பெனாசிரின் கணவர் ஆசிப் அலி சர்தாரிதான் என அப்போது பரவலாக குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு ஒரு பின்னணிக் கதையும் உண்டு.

தந்தை ஜுல்பிகர் அலி பூட்டோவின் லட்சியங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியோடு இருந்தவர் முர்டஸா பூட்டோ. இதற்காக தனது சகோதரியுடன் இணைந்து தீவிரமாக கட்சிப் பணியாற்றி வந்தார்.

ஆனால் அவரது செல்வாக்கு வளருவதை விரும்பாத ஆசிப் அலி சர்தாரி, முர்டஸாவின் பெயரைக் கெடுக்கும் வகையில் செயல்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக முர்டஸாவுக்கும், சர்தாரி, பெனாசிருக்கும் இடையே கருத்து மோதல்கள் வெடித்தன.

ஒரு முறை பிரச்சினைகளைத் தீர்க்க சர்தாரியை தனது வீட்டுக்கு பேச்சுக்கு அழைத்திருந்தார் முர்டஸா. சர்தாரியும் போனார். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை பெரும் சண்டையில் முடிந்து விட்டது.

இந்த சண்டையின்போது சர்தாரியின் மீசையை (அப்போது அட்டகாசமான முறுக்கு மீசை வைத்திருந்தார் சர்தாரி) பிடித்து இழுத்ததில் பாதி மீசை கையோடு வந்து விட்டதாம். அதன் பின்னர்தான் முர்டஸா மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

கட். முர்டஸாவின் மகள்தான் பாத்திமா. கவிஞரான இவர், பெனாசிரையும், அவரது அரசியல் பாணியையும் கடுமையாக சாடிவந்தவர். இப்போது சர்தாரியின் அரசியலையும் கடுமையாக சாடி வருகிறார்.

இந்த நிலையில் பாத்திமாவுக்கும், குளூனிக்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டுள்ளதாம். இமெயில், போன் அழைப்புகள் மூலம் இந்த நட்பு வலுப்பட்டு வருகிறதாம்.

இந்த நிலையில்தான் ஹாலிவுட்டுக்கு வருமாறு பாத்திமாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் குளூனி. இந்த வருகையின்போது தங்களது நட்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புவதாகவும் குளூனி, பாத்திமாவிடம் தெரிவித்துள்ளாராம்.

இந்த அழைப்பை இதுவரை பாத்திமா நிராகரிக்கவில்லை. ஆனால் ஏற்கவும் இல்லை. கிடப்பில் போட்டு வைத்துள்ளாராம்.

குளூனியின் நட்பை பாத்திமா விரும்புகிறார். அதேசமயம், அடுத்த கட்டம் என்று போவதற்கு அவர் தயங்குகிறார். அதற்குக் காரணம் வயது வித்தியாசம். குளூனிக்கு இப்போது 47 வயதாகிறது. பாத்திமாவுக்கோ 26 வயதுதான். இதனால்தான் அவர் தயக்கம் காட்டுகிறார்.

நட்புக்கு வயது வித்தியாசம் பிரச்சினை இல்லை. ஆனால் காதல், கல்யாணம் என்ற கட்டத்துக்குப் போகும்போது அது குறித்தும் யோசிக்க வேண்டியிருப்பதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளாராம் பாத்திமா.

ஆனால் பாத்திமா மீதான தனது காதலை மறைக்க விரும்பாமல் வெளிப்படையாகவே அவரிடம் கூறியுள்ளாராம் குளூனி. மேலும் அதில் தான் சீரியஸாக இருப்பதாகவும் தெரிவித்து விட்டாராம்.

பாத்திமாவின் புத்திசாலித்தனம், அழகு, தனித்துவம் தன்னை வெகுவாக கவர்ந்து விட்டதாகவும் கூறியுள்ளாராம் குளூனி.

இன்னும் வெளிப்படையாக, வெளி உலகுக்கு பாத்திமாவுடனான தனது காதல் குறித்து குளூனி கூறாவிட்டாலும் தனது நட்பு வட்டாரத்தில் பாத்திமா பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறாராம்.

கடந்த ஆண்டுதான் பாத்திமாவும், குளூனியும் முதல் முறையாக நேரில் சந்தித்தனர். சர்வதேச மாநாடு ஒன்றில்தான் இந்த சந்திப்பு நடந்தது. பார்த்த மாத்திரத்திலேயே பாத்திமா மீது காதல் கொண்டு விட்டாராம் குளூனி.

முன்பு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெமீமா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கானை காதலித்தார், மணந்தார். பின்னர் விவாகரத்தும் செய்தார். இப்போது பாகிஸ்தானைத் தேடி அமெரிக்க குளூனி வருகிறார்.

பாகிஸ்தானின் ஹாட் பேச்சு இப்போது இதுதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X