கடைசி மூச்சு உள்ளவரை கவர்ச்சியாய் தோன்றுவேன்! - பமீலா

Pamela Anderson
என் இறுதி மூச்சு உள்ளவரை கவர்ச்சியாய் இருக்க வேண்டும், தோன்ற வேண்டும் என்பதே என் ஆசை என்று கூறியுள்ளார் பிரபல ஹாலிவுட் கவர்ச்சி நடிகை பமீலா ஆண்டர்சன்.

42 வயதாகும் பமீலா ஆண்டர்ஸன் எண்பதுகளின் இறுதியில் தொடங்கி, இன்று வரை நடிகையாக, தயாரிப்பாளராக, பேஷன் அழகியாக, தொலைக்காட்சி தொகுப்பாளராக, டான்ஸராக கலக்கி வருகிறார்.

இன்றும் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு பமீலா செல்கிறார் என்றால், அடுத்த நாள் மீடியாவின் தலைப்புச் செய்தியை ஆக்கிரமித்துக் கொள்ளும் அளவு பவர்ஃபுல் நட்சத்திரமாகத் திகழ்பவர் பமீலா.

நிர்வாணம் என்பது தனக்கு ஒரு பெரிய விஷயமே அல்ல என்று கூறும் இவர், 2004-ல் ப்ளேபாய் நிறுவனர் பிறந்த நாளின் போசு பிறந்த மேனியுடன் வந்து கேக் ஊட்டி கதிகலங்கடித்தார்.

பல மேடைகளில் டாப்லெஸ் போஸ் கொடுத்து இதயத் துடிப்பை எகிற வைத்த பமீலா, சமீபத்தில் ஒரு பேஷன் நிகழ்ச்சியில் முழு உடைகளையும் நழுவவிட்டு கிட்டத்தட்ட நிர்வாண போஸ் காட்டி அதிர வைத்தார்.

இப்படிச் செய்வது மலிவான பப்ளிசிட்டி உத்திதானே என்று பிரிட்டிஷ் நாளிதழ் ஒன்று அவரிடம் கேள்வி எழுப்பியது சமீபத்தில்.

அதற்கு பமீலா பதில் கூறுகையில், "நான் கவர்ச்சியாக இருப்பதைத்தான் விரும்புகிறேன். கவர்ச்சிக்கு உடைகள் பெரும்பாலும் தடையாகத்தான் உள்ளன. எனவே முடிந்த வரை குறைந்த அளவு உடைகளை அணிகிறேன். என் இறுதி மூச்சு உள்ளவரை நிர்வாணத்தையும் கவர்ச்சியையும் விரும்பிக் கொண்டுதான் இருப்பேன்..." என்றார்.

பமீலாவுக்கு திருமணமாகி 13 மற்றும் 11 வயதில் இரு மகன்கள் உள்ளனர். தனது கணவர் டாமி லீயை கடந்த 1998ல் விவாகரத்து செய்தார் பமீலா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X