இந்தியப் பெண்கள் சூடும் குங்குமம் - வியந்த லின்ட்சே லோஹன்

By Staff

Lindsay Lohan
இந்தியப் பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமம் ஹாலிவுட் நடிகை லின்ட்சே லோஹனை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாம். குங்குமத்தின் வசீகரம் அவரை வெகுவாக கவர்ந்து விட்டதாம்.

இந்தி்யப் பெண்களின் மங்கல அடையாளங்களில் ஒன்று குங்குமம். வட இந்தியாவில் இதற்கு பிந்தி என்று பெயர். இந்த நெற்றித் திலகம்தான் லோஹனை வசீகரித்து விட்டதாம்.

இந்தியா வந்த லோஹன், கொல்கத்தாவுக்கு விசிட் அடித்தார். அங்கு பிரபலமான கெச்சூரி உணவை சாப்பிட்டு ரசித்தார். பின்னர் இந்தியப் பெண்கள் வைக்கும் குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொண்டு மகிழ்ந்தார்.

பிந்தியை லோஹனுக்கு ரொம்பவே பிடித்து விட்டதாம். என்ன, இந்தியாவில் கொசுக்கடிதான் தாங்கவே முடியவில்லை என்று சலித்துக் கொண்டாராம்.

லோஹன் விசிட் அடித்த இடத்தில் இருந்த ஒருவர் கூறுகையில், ஒரு சிறுமியின் நெற்றியில் இருந்த பிந்தியைப் பார்த்து வியந்த லோஹன் அவரை அழைத்து என்ன என்று விசாரித்தார். பின்னர் நானும் இதுபோல வைத்துக் கொள்ள முடியுமா என்று கேட்டார். அதன் பிறகு அவரும் பிந்தி வைத்துக் கொண்டு மகிழ்ந்தார்.

கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸும், கருப்பு டைட்ஸும், முழங்கால் வரை இடம் பெற்ற கருப்பு பூட்ஸும் அணிந்து படு க்யூட்டாக இருந்தார் லோஹன். சிவப்பு நிற பிந்தியில் அவர் அச்சு அசல் இந்தியப் பெண்ணாகவே தோன்றினார். பின்னர் காரில் ஏறிக் கிளம்பினார் லோஹன் என்றார்.

கொல்கத்தாவுக்கு அருகே உள்ள நரேந்திரபூர் என்ற இடத்தி்ல உள்ள சன்லாப் என்ற ஆதரவற்றோர் இல்லத்திற்கு விசிட் அடித்த லோஹன் குழந்தைகள் கடத்தல் தடுப்பு தொடர்பாக பிபிசி தயாரிக்கும் டாக்குமென்டரி படத்தின் ஷூட்டிங்குக்காக இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X