லைலா அலி அம்மா ஆனார்!

குத்துச்சண்டையில் முடி சூடா மன்னனாக விளங்கியவர் முகம்மது அலி. வென்று கொண்டே இருப்பேன் என்று பாக்ஸிங் ரிங்குகளில் முழங்கியவர். அவரது மகள்தான் லைலா அலி.
தந்தையைப் போலவே வெற்றி கொள்ள முடியாத குத்துச்சண்டை வீராங்கனையாக திகழ்கிறார். பெண் குத்துச்சண்டை வீராங்கனைகளில் இவர் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார்.
இதுதவிர டிவி நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார் லைலா. அமெரிக்கன் கிளாடியேட்டர்ஸ் என்ற நிகழ்ச்சியின் இணை தொகுப்பாளராக லைலா இருக்கிறார்.
அழகிய லைலாவும், அவரது கணவரும் முன்னாள் கால்பந்து வீரருமான கர்டிஸ் கான்வேயும், இப்போது பெருமை மிகு பெற்றோர்களாக மாறியுள்ளனர்.
கர்ப்பிணியாக இருந்த லைலா அழகிய ஆண் குழந்தையைப் பெற்றுள்ளார். இது லைலாவுக்கு முதல் குழந்தை. குழந்தைக்கு கர்டிஸ் முகம்மது கான்வே என்று பெயரிடப்பட்டுள்ளது.
லைலாவுக்கு குழந்தை பிறந்த செய்தியை உலகுக்கு 'கன்வே' செய்த கான்வே, தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications