மல்லிகாவின் லேட்டஸ்ட் 'ரசிகர்' ஜானி டெப்!

Johnny Depp
மல்லிகா ஷெராவத்தின் புதிய சர்வதேச ரசிகராக இணைந்துள்ளார் 'பைரேட்ஸ் ஆப் கரீபியன்' பட புகழ் ஹாலிவுட் ஸ்டார் ஜானி டெப்.

மல்லிகா ஷெராவத் என்றவுடன் ஜாக்கி சான்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். இப்போது அந்த இடத்திற்கு ஜானி டெப் வந்து விடுவாரோ என்று தெரிகிறது.

காரணம், மல்லிகாவின் அழகில் மயங்கி தொப் என விழுந்து விட்டார் ஜானி டெப்.

சான்டா மோனிகா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த ஒரு ஹாலிவுட் தனி விருந்து நிகழ்ச்சியில்தான் ஜானி டெப்பை சந்தித்தார் மல்லிகா. இந்த விருந்துக்கு அவரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர்.

ஹாலிவுட் பிரபலங்களான சீன் பென், பென் ஸ்டில்லர், ஓவன் வில்சன், சார்லிஸ் தெரான், உடி ஹாரில்சன், ஜான் ரெய்லி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இந்த நிழ்ச்சியில் மல்லிகாவும் கெளரவிக்கப்பட்டார்.

அப்போது மல்லிகாவிடம் ஜானி டெப் படு இயல்பாக பழகினாராம்.

இதுகுறித்து மல்லிகா புளகாங்கிதமடைந்துள்ளார். அவர் கூறுகையில், ஜானி டெப் அமெரிக்காவின் புகழ் பெற்ற நடிகர். அவரை சந்தித்தது மிகப் பெரிய மகிழ்ச்சி. நேரில் பார்க்கும்போது இன்னும் அழகாக இருக்கிறார்.

எனது ஹிஸ் படத்தின் டிரெய்லரைப் பார்க்க ஆவலோடு இருப்பதாக கூறினார். அதைப் பார்த்த பின்னர் நிச்சயம் அவருக்கு தூக்கமே வராது என்று கூறி சிரிக்கிறார் மல்லிகா.

இதற்கிடையே மல்லிகா அடுத்து அமெரிக்கப் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இது ஒரு ரொமான்டிக் காமெடிப் படமாகும். அமெரிக்க அரசியலை பின்புலமாகக் கொண்டது. லவ் பாரக் என்று இதற்குப் பெயரிட்டுள்ளனர்.

ஒபாமாவை சகட்டுமேனிக்குக் கிண்டலடிக்கப் போகிறார்கள் என்று தோன்றுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X