டாய்லெட்டில் பிளேபாய் அழகி அடிதடி!

23 வயதாகும் அழகி மேக்ஸின் ஹார்ட்கேஸில். இவர் முன்னாள் பாப் பாடகர் பால் என்பவரின் மகள் ஆவார். அதேபோல பிளேபாய் இதழுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்து பிரபலமானவர் லூயிஸ் குளோவர்.
குளோவரின் கணவருடன், மேக்ஸினுக்கு ரகசிய காதல் இருப்பதாக குளோவர் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். அடிக்கடி தனது கணவரை சந்திக்கிறார் மேக்ஸின் என்றும் கூறி வந்தார்.
இந்த நிலையில், ஒரு கிளப்புக்கு வந்தபோது இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். கேட்க வேண்டுமா, சண்டை ஆரம்பித்தது.
அங்குள்ள டாய்லெட்டுக்கு போன மேக்ஸினை பின் தொடர்ந்து சென்ற குளோவர், அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்து சரமாரியாக அடித்தாராம்.
இந்த சம்பவம் பின்னர் போலீஸ் வரைக்கும் போய் விட்டது. தற்போது கிழக்கு சசெக்ஸில் உள்ள கோர்ட்டில் வழக்குப் பதிவாகியுள்ளது.
கோர்ட்டில் ஆஜராகி மேக்ஸின் கொடுத்த வாக்குமூலத்தில், எனது முகத்தில் ஓங்கி குத்தினார் குளோவர். நான் தரையில் விழுந்து விட்டேன். ஆனாலும் விடாத அவர் தலைமுடியைப் பிடித்து இழுத்து தூக்கி மீண்டும் குத்தினார்.
எனது முகத்திலிருந்து ரத்தம் கொட்டியது. டாய்லெட் தரையெல்லாம் ரத்தமயமானது. பின்னர் எனது தலையைப் பிடித்து டாய்லெட்டில் வைத்து மோதப் பார்த்தார் குளோவர். ஆனால் நான் சுதாரித்து வெளியே ஓடி வந்து விட்டேன்.
குளோவர் நடத்திய இந்த கொலை வெறித் தாக்குதலைப் பார்த்தவர்கள் அலறினர்.
எனது பாதி தலை முடியைப் பிய்த்து விட்டார் குளோவர். எனது மூக்கு உடைந்து போய் விட்டது என்றார்.
ஆனால் 26 வயதாகும் குளோவரோ, இதை அப்படியே மறுத்துள்ளார். நான் என்னைப் பாதுகாத்துக் கொள்ளவே மேக்ஸினைத் தாக்கினேன். உடல் ரீதியாக அவரை பாதிப்படைய வேண்டும் என்ற நோக்கில் செய்யவில்லை என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதி அதை 2 மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளார்.
அடுத்த பெண்ணின் கணவருக்கு ஏன் ஆசைப்பட வேண்டும், பிறகு ஏன் இப்படி அடிபட வேண்டும்!


Click it and Unblock the Notifications











