twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜாக்சனின் 3வது மகனின் வாடகைத் தாய் அடையாளம் தெரிந்தது

    By Staff
    |

    Blanket
    மைக்கேல் ஜாக்சனின் 3வது மகன் பிரின்ஸ் மைக்கேல் 2 அல்லது பிளாங்கட்டைப் பெற்றுக் கொடுத்த வாடகைத் தாய் யார் என்ற ரகசியம் உடைந்துள்ளது.

    அவர், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த நர்ஸ் ஹெலனா என்று தெரிய வந்துள்ளது. குழந்தையைப் பெற்றுக் கொடுப்பதற்காக அவர் ஜாக்சனிடம் 20 ஆயிரம் டாலர் பணத்தைப் பெற்றுள்ளார். குழந்தை பெற்றுத் தருவதற்காக ஹெலனாவுக்கு ஏகப்பட்ட வசதிகளை செய்து கொடுத்துள்ளார் ஜாக்சன். தனியாக ஒரு அட்டென்டரையும் கூட ஏற்பாடு செய்து கொடுத்தாராம் ஜாக்சன்.

    மைக்கேல் ஜாக்சனின் 3வது மகன் பிரின்ஸ் மைக்கேல் 2. 7 வயதாகும் இந்த சிறுவனுக்கு பிளாங்கட் என்ற பெயரும் உண்டு. இந்த சிறுவனை வாடகைத் தாய் மூலம் பெற்றார் ஜாக்சன். ஆனால் அந்த வாடகைத் தாயார் குறித்த தகவலை அவர் ரகசியமாக வைத்திருந்தார்.

    இந் நிலையில் ஜாக்சனின் மறைவுக்குப் பின்னர் பிளாங்கட்டின் தாயார் யார் என்ற ஆர்வம் அதிகரித்தது. ஆனாலும் அதுகுறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்தின் டெய்லி மிர்ரர் வாடகைத் தாய் யார் என்ற தகவலை வெளியிட்டுள்ளது.

    அவர் மெக்சிகோவைச் சேர்ந்த நர்ஸ் ஹெலனா. குழந்தையைப் பெற்றுத் தருவதற்காக இவருக்கு ஜாக்சன் 20 ஆயிரம் டாலர் பணம் கொடுத்துள்ளார். மேலும், அவருக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கி மகிழ்வித்துள்ளார். அவருக்காக ஒரு அட்டென்டரையும் கூட நியமித்தாராம் ஜாக்சன்.

    தனக்கு அழகான, வித்தியாசமான குழந்தை வேண்டும் என்பதற்காகவே ஹெலனா மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினாராம் ஜாக்சன். அதற்காகவே ஹெலனாவை அவர் தேர்வு செய்துள்ளார் என்று அந்த செய்தி கூறுகிறது.

    2002ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி பிளாங்கட் பிறந்தான். தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சான்டியாகோ நகருக்கு அருகே உள்ள லா மெசா என்ற நகரில் அவன் பிறந்தான்.

    செயற்கை முறைக் கருத்தரிப்பு மூலம் ஹெலனா, ஜாக்சனின் குழந்தையைப் பெற்றெடுத்தார். இதற்காக தனது விந்தனுக்களை தானம் செய்துள்ளார் ஜாக்சன்.

    இன்னொரு பெண் மூலம் கரு முட்டைகளை எடுத்துள்ளனர். அந்தப் பெண்ணுக்கு வெறும் 3500 டாலர் மட்டுமே தரப்பட்டதாம். முட்டைகளை எடுத்த பின்னர், அந்தப் பெண்ணிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டனராம். அந்தப் பெண் யார் என்ற தகவல் தொடர்ந்து ரகசியமாகவே உள்ளது.

    இறந்து ரூ. 500 கோடி சம்பாதிக்கும் ஜாக்சன்:

    மைக்கேல் ஜாக்சன் இறந்த பின்னரும் அவரது புகழ் அவரது குடும்பத்தாருக்கு பணத்தை வாரி இறைக்கிறது. அவரது பாடல், ஆல்பம் மூலம் ஆண்டுக்கு ரூ. 500 கோடி வரை கிடைக்கும் என கூறப்படுகிறது.

    மைக்கேல் ஜாக்சன் தனது பாடல், ஆல்பம் விற்பனை குறித்து சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தார். அந்த ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு பாடல் ஆல்பம் விற்பனையில் அவருக்கு பங்கு தர வேண்டும்.

    தற்போது மைக்கேல் ஜாக்சன் இறந்துவிட்ட நிலையில் அவரது பாடல் ஆல்பங்கள் வேகமாக விற்று வருகி்ன்றன. இதையடுத்து அவரது குடும்பத்துக்கு இந்த ஆண்டு ரூ. 500 கோடி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    ஜாக்சனுக்கு சோனி-ஏடிவி நிறுவனத்தில் ரூ. 2500 கோடி சொத்துள்ளது. அவரது முதலீடுகள், ஆல்பங்கள் விற்பனை மூலம் ஆண்டுக்கு ரூ. 250 கோடி முதல் 500 கோடி வரை லாபம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    வாழும் போது பெரும் கடன் சுமையுடன் வாழ்ந்து, கடனை அடைக்க தனது உடமைகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ஜாக்சன் தற்போது தனது மறைவுக்கு பின்னர் குடும்பத்தினரை செல்வச் செழிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X