twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நிர்வாணப் படம்: பேஷன் டிசைனர் மீது ப்ரூனி வழக்கு

    By Staff
    |

    carla Bruni
    லண்டன்: நிர்வாணப் படத்தை வெளியிட்ட பேஷன் டிசைனர் மீது பிரான்ஸ் அதிபர் சர்கோசியின் மனைவியும், முன்னாள் மாடல் அழகியுமான கார்லா ப்ரூனி வழக்கு தொடர்ந்துள்ளார்.

    பிரெஞ்சு ஆடை வடிவமைப்பு நிறுவனமான பார்டன்,10 ஆயிரம் ஷாப்பிங் பைகளைத் தயாரித்தது. அதில் 1993ம் ஆண்டு எடுக்கப்பட்ட ப்ரூனியின் நிர்வாணப் படத்தை அச்சடித்து, கீழே, "My man should have taken me shopping at Pardon" என்ற வாசகத்தையும் பிரசுரித்திருந்தனர்.

    ஒரு பை 3 யூரோவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐந்து யூரோவுக்கு மேல் பர்ச்சேஸ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்தப் பையை இலவசமாகவே வழங்குகின்றனர்.

    இதைப் பார்த்த ப்ரூனி அதிர்ச்சி அடைந்தார். பார்டன் குழுமம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து ப்ரூனியின் வழக்கறிஞர் தியரி ஹர்ஸாக் கூறுகையில், இது திருட்டுத்தனமானது. எனது கட்சிக்காரரின் குடும்ப வாழ்க்கையை இது பெரிதும் பாதிக்கும்.

    பார்டன் நிறுவனத்திடம் 1 லட்சத்து 25 ஆயிரம் யூரோ நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளோம்.

    உடனடியாக அந்தப் பைகளை கடைகளிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும்.

    கார்லா ப்ரூனியின் அந்தப் படத்தை அவரது அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்த முடியாது. அதற்கான முழு உரிமையும் ப்ரூனியிடம் மட்டுமே உள்ளது என்றார் அவர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X