கார்லா படம்-ரூ36 லட்சத்துக்கு ஏலம்!

பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியின் காதல் மனைவிதான் கார்லா ப்ரூனி. இத்தாலி அழகியான ப்ரூனி ஏகப்பட்ட சர்ச்சைகள், சலசலப்புடன்தான் தினசரி வாழ்க்கையைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்.
இத்தாலியின் பிரபலமான மாடல் அழகியாக திகழ்ந்தபோது அவரது முழு நிர்வாணப் படங்கள் நிறைய வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இன்டர்நெட்டில் இன்றும் கூட அவற்றைப்பார்க்க முடியும்.
இந்த நிலையில் லண்டனில் உள்ள கிறிஸ்டி ஏல மையத்தில் ப்ரூனியின் முழு நிர்வாணப் புகைப்படம் ஏலத்திற்கு வந்தது. இந்தப் படம் 1993ம் ஆண்டு எடுக்கப்பட்டது. அப்போது சூப்பர் மாடலாக வலம் வந்து கொண்டிருந்தாப் ப்ரூனி.
இதுவரை வெளிவராத அபூர்வப் படம் என்பதால் இப்படத்திற்கு பெரும் கிராக்கி ஏற்பட்டது. இதையடுத்து எதிர்பார்த்ததை விட 30 மடங்கு அதிக விலைக்கு இப்போது இப்படம் ஏலம் போயுள்ளது. அதாவது ரூ. 36,34,541க்கு படம் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை ஏலம் எடுத்தவர் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஏலத்தில் எடுக்கப்பட்ட தொகை முழுவதும் ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோடிஸ் என்கிற அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளிக்கப்படவுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











