ஜாக்சனின் 3 குழந்தைகள் உலக டூர் இசை நிகழ்ச்சி

மைக்கேல் ஜாக்சனின் 'லெகசி' தொடர வேண்டும், அவரது பாடல் அலை உலகம் முழுவதும் அவரது குழந்தைகள் மூலம் பரவிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தைத் தீட்டியுள்ளாராம் ஜோ.
தி ஜாக்சன் த்ரீ என்ற பெயரில் இந்த உலகப் பயணத்திற்கு அவர் திட்டமிட்டுள்ளார்.
ஜாக்சன் உயிருடன் இருந்தபோது அவருக்கும், தந்தைக்கும் இடையே சரிவர பேச்சுவார்த்தை கிடையாது. அம்மாவைத்தான் ஜாக்சன் அதிகம் நேசித்தார். தந்தையைக் கண்டுகொள்ளவில்லை. அவரை உதாசீனப்படுத்தி, அவமதித்து வந்தார் என்று கூட கூறப்பட்டது.
தனது உயிலிலும் கூட ஜோவுக்கு எதையும் விட்டு வைக்கவிலலை ஜாக்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் ஜாக்சனின் 3 குழந்தைகளை வைத்து உலக இசைப் பயணத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளார் ஜோ.
ஆனால் ஜோவின் இந்தத் திட்டத்திற்கு ஜாக்சன் குடும்பத்தினர் இன்னும் அனுமதி தரவில்லை. இருந்தாலும் அது குறித்து தான் கவலைப்படவில்லை என்கிறார் ஜோ.
2010ம் ஆண்டு தி ஜாக்சன் த்ரீ இசை பயணம் தொடங்கும். இதுதொடர்பாக ஏற்கனவே ஜாக்சனின் மூத்த குழந்தைகள் இருவரிடமும் பேசி சம்மதமும் வாங்கி விட்டாராம் ஜோ. 3வது குழந்தையான பிளாங்கட்டையும் இதில் சேர்த்துக் கொண்ட பின்னர் தனது திட்டத்தை வெளிப்படையாக அறிவிக்கப் போகிறாராம் ஜோ.


Click it and Unblock the Notifications











