'மப்பில்' டிரைவிங்-நடிகைக்கு தண்டனை

By Staff

Mischa Barton
குடிபோதையில் கார் ஓட்டியதாக பிடிபட்ட ஹாலிவுட் நடிகை மிஸ்சா பார்ட்டனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் அவர் தனது தவறை ஒப்புக் கொண்டதால், சிறைத் தண்டனைக்குப் பதில் 3 ஆண்டு காலம் அவர் கண்காணிப்பில் வைக்கப்படுவார்.

கடந்த டிசம்பர் மாதம் குடித்து விட்டு கார் ஓட்டியதாக கைது செய்யப்பட்டார் மிஸ்சா. இதுதொடர்பான வழக்கு பெவர்லி ஹில்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மிஸ்சாவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, 3 மாத கால போதையிலிருந்து மீள்வது எப்படி என்ற வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெறுவது, 2000 டாலர் அபராதம் ஆகியவற்றை அறிவித்தது.

ஆனால் தனது தவறை ஒத்துக் கொண்டு, சிறைத் தண்டனையை ரத்து செய்யுமாறு மிஸ்சா கோரினார். இதை ஏற்ற நீதிமன்றம், சிறைத் தண்டனையை மட்டும் ரத்து செய்தது. இருப்பினும் 3 ஆண்டு காலம் அவர் கண்காணிப்பில் வைக்கப்படுவார் என அறிவித்தது.

தீர்ப்பு அளிக்கப்பட்டபோது மிஸ்சா கோர்ட்டில் இல்லை. அவரது வக்கீல் அந்தோணி செலர்னோதான் வந்திருந்தார்.

கடந்த டிசம்பர் 27ம் தேதி படு வேகமாக கார் ஓட்டி வந்த மிஸ்சா, போக்குவரத்து சிக்னலை மதிக்காமல், தாறுமாறாக காரை ஓட்டினார். இதையடுத்து அவரை போலீஸார் விரட்டிச் சென்று மடக்கி கைது செய்தனர்.

இதுகுறித்து பின்னர் மிஸ்சா கூறுகையில், நான் என்ன செய்தேன் என்றே எனக்குத் தெரியவில்லை. எனக்குள் இருந்த மது, என்னை எனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க அனுமதிக்கவில்லை. நடந்த தவறுக்கு முழுப் பொறுப்பேற்கிறேன். வேண்டும் என்றே நான் அப்படி நடந்து கொள்ளவில்லை. நான் செய்தது முட்டாள்தனம் என்று தவறை ஒப்புக் கொண்டார்.

தவறை ஒப்புக் கொள்வதே திருந்தியதற்கு சமம், மிஸ்சாவும் சரியாகி விடுவார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X