தொடையில் 'துப்பாக்கி பச்சை' குத்திய ரிஹானா!

ஹாலிவுட்டின் கவர்ச்சிப் பாடகி ரிஹானா. இவர் இப்போது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அது, அவர் தனது தொடையில் குத்தியுள்ள பச்சை.
ரிஹானா தற்போது பேட்டில்ஷிப் என்ற படத்தில் நடிக்கிறார். இதற்காக தனது வலது தொடையில், இடுப்புக்கு சற்று கீழே ஒரு பிஸ்டலை பச்சை குத்தியுள்ளார். அதேபோல தனது வலது மார்புக்கு வெகு அருகேயும் ஒரு குட்டி பிஸ்டலை பச்சை குத்தியுள்ளார்.
ஆனால் இது நிரந்தரமானதில்லையாம். படப்பிடிப்புக்குப் பிறகு இதை அழித்து விட முடியுமாம். படத்திற்காக மட்டுமே இந்த பச்சை என்கிறார் ரிஹானா.
ஏற்கனவே தனது உடம்பில் ஏகப்பட்ட ஐட்டங்களை பச்சை குத்தி பரபரப்பை ஏற்படுத்தி வைத்திருப்பவர் ரிஹானா என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் குத்தியுள்ள பிஸ்டல் பச்சை சற்றே கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஹானலூலுவுக்கு வந்த அவர் பிகினி உடையில் காட்சி அளித்தபோதுதான் இந்த பச்சை மேட்டர் வெளியில் தெரிந்தது.


Click it and Unblock the Notifications











