கொலம்பியா 'காளியம்மா'!

'காளி- தி வாரியர் காடஸ்' என்ற பெயரில் உருவாகும் படத்தில் காளி வேடத்தில் நடிக்கப் போகிறார் ஷகீரா. ஹைகிரவுண்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கரண் அரோரா இப்படத்தை தயாரிக்கிறார்.
இதுகுறித்து அரோரா கூறுகையில், காளி-தி வாரியர் காடஸ் ஒரு 3டி படமாகும். முழு நீள அளவிலான, 2 மணி நேர இந்திப் படமாக இது உருவாகிறது. லண்டனில் வைத்துப் படமாக்கப்படுகிறது. வசதிப்படாவிட்டால், கிழக்கு ஐரோப்பாவில் ஷூட்டிங்கை வைப்போம்.
இப்படத்தில் காளி வேடத்தில் நடிக்கவிருப்பது ஷகீராதான். கொள்கை அளவில் இதற்கு அவர் ஒப்புக் கொண்டுள்ளார். எனது இணைத் தயாரிப்பாளர் ஷகீராவை சந்தித்துப் பேசியுபோது இதைத் தெரிவித்தார். இருப்பினும் ஒப்பந்தத்தில் அவர் இன்னும் கையெழுத்திடவில்லை. விரைவில் ஊதியம் தொடர்பான பேச்சுக்கள் முடிவடைந்த பின்னர் அது நடைபெறும் என்றார்.
ஏன் இந்திய நடிகை யாரும் கிடைக்கவில்லையா என்று கேட்டால், டஸ்க்கியான நடிகையாக எதிர்பார்த்தோம். அது ஷகீரா மட்டுமே. அதுமட்டுமல்லாமல் அவர் ஒரு சர்வதேச நட்சத்திரமாகவும் ஜொலிப்பதால் ஷகீராவைத் தேர்வு செய்தோம் என்றார் அரோரா.
2 முறை கிராமி விருது பெற்றவர் ஷகீரா, கொலம்பியாவைச் சேர்ந்தவர். நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்க உலகக் கால்பந்துப் போட்டியின் தீம் மியூசிக்கான வாக்கா வாக்கா பாடலை பாடி மேலும் பிரபலமானவர் ஷகீரா.


Click it and Unblock the Notifications











