நிர்வாணத்திற்கு அஞ்சாத அனிஸ்டன்

சமீபத்தில் ஜிக்யூ என்ற இதழுக்காக நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் அனிஸ்டன். கழுத்தில் ஒரு டை மட்டும் அணிந்து கொண்டு அவர் கொடுத்திருந்த அந்த கலக்கல் நியூட் போஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதை ஏன் பரபரப்பாக பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை, நான் நிர்வாணமாக நின்றபோது எந்தப் பயமும் இல்லை. வெட்கமும் இல்லை. தயக்கப்படவும் இல்லை.
ஆனால் கழுத்தில் இருந்த டைதான் என்னை உறுத்தியது. எதற்காக டையைக் கட்டி விட்டார்கள் என்று தெரியவில்லை என்று செல்லமாக அலுத்துக் கொண்டார்.
40 வயதை தொடப் போகும் அனிஸ்டன், தற்போது மார்லி அன்ட் மீ என்ற படத்தில் நடித்துள்ளார். அடுத்து பூமாஸ் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.
சரி, நீங்கள் கர்ப்பமாக இருப்பதாக ஒரு செய்தி உலா வருகிறதே என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. நான் கர்ப்பமாக இருந்தால் எனக்குத் தெரியாதா என்று எதிர் கேள்வி கேட்டு எகிறடிக்கிறார் அனிஸ்டன்.
இவருடைய பழைய கணவர் பிராட் பிட் என்பது தெரியுமல்லவா. பிட்டுடன் இன்னும் தனக்கு நல்ல நட்பு இருப்பதாக கூறுகிறார் அனிஸ்டன்.
பிராட் பிட்டுடனான தனது பழைய நட்பை சற்றே கண்களில் கொண்டு வந்து மெளனம் காத்த அனிஸ்டன் நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டபடி, 20 வயதுகளில் இருந்ததை விட இப்போதுதான் நான் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறேன் என்று புன்னகைக்கிறார்.


Click it and Unblock the Notifications











