மவுசில்லாத ஜூலி!

By Staff

Anjelina
ஏஞ்செலினா ஜூலியின் மவுசு உலகறிந்தது. ஆனால் அவரை அட்டைப் படத்தில் போட்ட பல பத்திரிக்ைககளுக்கு சேல்ஸ் குறைந்து சிரமம் ஏற்பட்டுள்ளதாம்.

தேனூறும் உதடுகள், கவிழ்க்கும் கண்கள், அசத்தும் அழகு என நடமாடும் ஏஞ்சலாக உலா வரும் ஜூலிக்கு உலகம் முழுவதும் ரசிகர் கூட்டம் குண்டக்க மண்டக்க இருக்கிறது.

அழகோடு அவரது மனிதாபிமானத்திற்கும் நிறையவே மவுசு உண்டு. பல நாட்டுக் குழந்தைகளை தன் குழந்தைகளாக தத்தெடுத்து வளர்த்து வரும் ஜூலிக்கு அந்த வகையிலும் பாராட்டுக்கள் நிறைய கிடைத்தன - கூடவே சர்ச்சைகளும் ஒட்டிக் கொண்டிருந்தாலும்.

ஆனால் ஜூலியால் சில பத்திரிக்கைகள் டென்ஷனாக உள்ளனவாம். என்ன காரணம் என்றால், ஜூலியை அட்டைப் படமாக போட்ட பத்திரிக்ைககள் அவை. ஜூலியை அட்டைப் படத்தில் போட்ட இதழ்கள் எல்லாம் வழக்கத்தை விட குறைந்த அளவே விற்பனையாகியுள்ளதாம்.

காஸ்மோபாலிடன், மாரி கிளாரி, எஸ்கொயர் போன்ற புகழ் பெற்ற இதழ்களும் இதில் அடக்கம். கடந்த ஆண்டு மொத்தம் 17 இதழ்கள், தங்களது அட்டைப் படத்தில் ஜூலியை அதிகம் போட்டுள்ளன. ஆனால் இதில் 8 இதழ்களுக்கு செமத்தியான விற்பனை சரிவாம்.

ஜூலியின் இதழ்களுக்கு உள்ள மவுசு கூட, அவரது படத்தைப் போட்ட இதழ்களுக்குக் கிடைக்காமல் போனது ஆச்சரியம்தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X