'நியூட்'தான் செக்ஸி - கிறிஸ்டியானா அகுலேரா!

கல்யாணமாகி சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வரும் அழகுப் பெண் கிறிஸ்டியானா. 28 வயதாகும் இந்த பாடகி, ஜோரான் பிராட்மேனின் மனைவி ஆவார்.
காஸ்மோபாலிடன் இதழுக்காக அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், நிர்வாணம் குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.
நான் நிர்வாணமாக இருக்கும்போதுதான் செக்ஸியாக இருக்கிறேன், அழகாக இருக்கிறேன். உங்களுக்குப் பிடிக்காத சில விஷயங்களை உங்களது காதலர் விரும்பலாம். அது அற்புதமான விஷயம், உணர்வு.
உண்மையில் வாழ்க்கையின் தடங்கள் அனைத்துமே அழகானவைதான்.
எனக்கு எனது கணவருடன் சேர்ந்து குளிப்பது, கூடவே கொஞ்சம் ஒயினும் இருந்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அதை நான் விரும்புகிறேன். நான் செக்ஸியாக தோன்ற வேண்டும் என்று என்னை விட எனது கணவருக்குத்தான் நிறைய ஆசை. அதற்கான ஆலோசனைகளையும் அவர் சொல்கிறார்.
ஆனால் நிர்வாணமாக இருக்கும்போதுதான் நான் செக்ஸியாக இருக்கிறேன். நான் மட்டுமல்லா எல்லாப் பெண்களுமே அப்படித்தான். பெண்களின் உடல் இயல்பு அப்படி.
என்னைப் பார்க்கும் ஆண்களுக்கு நிச்சயமாக நான் கவர்ச்சியாகத்தான் தெரிவேன். இருப்பினும் ஆணா அல்லது பெண்ணா, யாரை நிர்வாணமாக பார்க்க விரும்புகிறீர்கள் என்று என்னிடம் கேட்டால், நிச்சயம் பெண்ணைத்தான் நான் தேர்வு செய்வேன். இயற்கையாகவே நாங்கள்தான் அழகு, செக்ஸி என்று சிரிக்கிறார் அகுலேரா.
அகுலேராவுக்கு 2 வயதான மாக்ஸ் என்ற குழந்தை உள்ளது. இருந்தாலும் தொடர்ந்து தான் செக்ஸியாக இருக்க விரும்புவதாக கூறுகிறார் அவர்.


Click it and Unblock the Notifications











