'கணவர்' காப்ரியோ..சைரஸ் அதிரடி!

By Staff

Miley cyrus
லியானோர்டோ டி காப்ரியோவின் மனைவி நான்தான். நிச்சயம் ஒரு நாள் காப்ரியோவை நான் மணப்பேன் என்று அதிரடியாக கூறியிருக்கிறார் ஹாலிவுட்டின் குட்டி நடிகை மைலி சைரஸ்.

ஹாலிவுட்டின் இளம் நாயகி மைலி சைரஸ். கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவர் தன்னைச் சந்தித்த செய்தியாளர்களிடம் கலக்கலான பேட்டியைக் கொடுத்தார்.

அவர் கூறுகையில், காப்ரியோ என்னை வெகுவாக ஈர்த்து விட்டார். கட்டினால் அவரைத்தான் கட்டுவேன். அவர்தான் என் கணவர், நான் தான் அவரது மனைவி.

காப்ரியோவை எனது கணவராகத்தான் பார்க்கிறேன். அவரை நான் இதுவரை சந்தித்ததில்லை. நான்தான் அவரது மனைவி என்று அவருக்கும் தெரியாது. ஆனால் நான் தான் அவரது மனைவி ஆவேன். நிச்சயம் ஒரு நாள் இது நடக்கும் என்றார் சைரஸ்.

இதைக் கேட்டு குழப்பமடைந்த செய்தியாளர்கள், காப்ரியோதான், சூப்பர் மாடல் அழகியான பாரேபலியை காதலிக்கிறாரே என்று கேட்டபோது, அதெல்லாம் நீடிக்காது. நிச்சயம் அந்தக் காதல் தோல்வியில் முடியும். காப்ரியோ என்னைத்தான் மணப்பார் என்று புன்னகையை வீசியபடி இடத்தைக் காலி செய்தார் சைரஸ்.

சைரஸின் இந்த படு போல்டான பேட்டிதான் இப்போதைக்கு ஹாலிவுட்டின் ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X