எம்மா, அம்மம்மா!

ஹாரிபாட்டர் சீரிஸ் படங்களில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்கள்தான் ரூபர்ட்டும், எம்மாவும். இப்போது வளர்ந்து வாலிபப் பருவத்தைத் தொட்டு விட்டனர்.
குழந்தைப் பருவத்தில் இருந்த இவர்கள் இப்போது டீன் ஏஜ் வயதைத் தொட்டுள்ளதால், பருவ மாற்றம் ஏற்பட்டு, காதல் செய்யும் நேரம் இது என்று டூயட் பாட ஆரம்பித்துள்ளனராம்.
இதை இருவரது மேனேஜர்களும் மறுக்கின்றனர். ஆனால் அவர்கள் இருவரும் போகும் பாதையைப் பார்க்கும்போது நிச்சயம் இது புதிய பாதைதான் என்று கூறுகின்றனர் ஹாலிவுட் காதல் அனுபவங்கள் பலவற்றைப் பார்த்தவர்கள்.
கடைசியாக வந்த ஹாரிபாட்டர் நாவலில் ஹாரியும், அவரது காதலியும் திருமணம் செய்து கொள்வது போல இருக்கும்.
நிழல் உலகின் ஹாரியும், அவரது காதலியும் அதுபோல செய்து கொள்வார்களா, அவர்களது காதல் கல்யாணத்தில் முடியுமா அல்லது டேட்டிங்கோடு 'தி என்ட்' போட்டு விடுவார்களா என்பதை ஒட்டுமொத்த ஹாலிவுட்டும் ஜாலியாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











