ஜாக்சன் மறைவால் சோகம்-மருத்துவமனையில் எலிசபெத் டெய்லர்

By Staff

Michael Jackson with Liz Taylor
லாஸ் ஏஞ்சலெஸ்: மைக்கேல் ஜாக்சன் மறைவால் ஏற்பட்ட துக்கம் இன்னும் குறையாத நிலையி்ல் சோகத்தில் இருக்கும் ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜாக்சனும், எலிசபெத் டெய்லரும் மிக நெருங்கிய நண்பர்கள். ஜாக்சனின் திடீர் மறைவால் டெய்லர் பெரும் சோகமடைந்துள்ளார்.

ஏற்கனவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் டெய்லருக்கு ஜாக்சனின் மறைவுத் துக்கமும் சேர்ந்து கொண்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து லாஸ் ஏஞ்சலெஸில் உள்ள மருத்துவமனையில் டெய்லர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து டெய்லருக்கு நெருக்கமான பத்திரிக்கையாளர் சின்டி ஆடம்ஸ் கூறுகையில், ஜாக்சனின் மறைவால் ஏற்பட்ட துக்கம் இன்னும் டெய்லரிடமிருந்து விலகவில்லை.

ஜாக்சன் நினைவிலேயே அவர் உள்ளார். இதுதவிர பலவீனம், களைப்பு, விரக்தி உள்ளிட்டவையும் சேர்ந்து கொண்டதால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜாக்சனை நினைத்து தொடர்ந்து அவர் அழுதபடியே உள்ளார். ஜாக்சன் இல்லாத வாழ்க்கையை அவரால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

லண்டனில் ஜாக்சன் நிகழ்த்தவிருந்த இசை நிகழ்ச்சிகளை காண ஆவலோடு இருந்து வந்தார். ஆனால் அவரது மறைவுச் செய்தி வந்தது முதல் அழுதபடியே உள்ளார்.

மேலும், ஜாக்சனின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், டெய்லரை கலந்து கொள்ள ஜாக்சன் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. காரணம், அவர் ஜாக்சனுக்குத்தான் நெருங்கிய தோழியாக இருந்தார், அவர்களுக்கு நெருக்கமானவராக இல்லை என்பதால். இதுவும் கூட டெய்லரை பாதித்து விட்டது என்று கூறியுள்ளார் ஆடம்ஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X