அழகிய 'ராட்சசிகளின்' மோதல்!

அழகிய ராட்சசி அலிஷியா சில்வர்ஸ்டோனுக்கும், பிராப்ளம் தேவதை பிரிட்னி ஸ்பியர்ஸுக்கும் இடையே லடாய் என செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அலிஷியாவின் பி.ஆர்.ஓ. இதை மறுக்கிறார்.
பேட்மேன் அனட் ராபின் படத்தின் நாயகியான அலிஷியா, ஹவ் ஐ மெட் யுவர் மதர் என்ற டிவி ஷோவில் நடித்து வருகிறார். இவருடன் இணைந்து நடித்திருப்பவர் பிரிட்னி ஸ்பியர்ஸ்.
வரவிருக்கிற எபிசோடில், ஸ்பியர்ஸ் அலுவலக ரிசப்ஷனிஸ்டாகவும், அவரது பாஸ் வேடத்தில் அலிஷியாவும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஷோவிலிருந்து அலிஷியா விலகி விட்டதாக செய்திகள் கூறுகின்றன. அலிஷியாவுக்கும், பிரிட்னிக்கும் இடையே பிரச்சினை. அதனால்தான் அலிஷியா விலகி விட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அலிஷியா இதை மறுக்கிறார். இதுகுறித்து அலிஷாவின் பி.ஆர்.ஓ. எலிசபெத் கூறுகையில், பிரிட்னி இந்த தொடரில் நடிக்க வருவதற்கு முன்பே அலிஷா சம்பந்தப்பட்டவை முடிந்து விட்டது. பிரிட்னிக்கும், அலிஷாவுக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை.
எனவே இதுபோன்ற தகவல் எல்லாம் ஹாலிவுட்டில் சகஜம்தான் என்கிறார் எலிசபெத்.
அதேசமயம், ஜோஷ் ரேட்னர் நடிக்கும் ஒரு டிவி தொடரில் அவருடைய பி.ஏ. கேரக்டரில் நடிக்கிறாராம் அலிஷா.


Click it and Unblock the Notifications











