மேன்டியின் லெஸ்பியன் மாம்!

இந்த செக்ஸ் விவகாரத்தில் லேட்டஸ்டாக சிக்கியிருப்பவர் பிரபல ஹாலிவுட் பாடகியான மேன்டி மூரின் அம்மா ஸ்டேசி மூர்!
மேன்டியின் தந்தையும் தன் கணவருமான மூரைத் துரத்திவிட்ட ஸ்டேசி, ஒரு டென்னிஸ் வீராங்கனையுடன் கடந்த இரு ஆண்டுகளாக லெஸ்பியன் உறவு கொண்டுள்ளாராம்.
அந்த வீராங்கனை வேறு யாருமல்ல, க்ளாடெட் லாலிபெர்ட். அமெரிக்காவில் பிரபலமான டென்னிஸ் வீராங்கனை இவர். 2006-ம் ஆண்டிலிருந்து ஸ்டேசி மூரும் இவரும் ஒன்றாகத்தான் வசிக்கிறார்களாம்.
இந்த ரகசியங்களை சமீபத்தில் ஒரு அமெரிக்கப் பத்திரிகை அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, வெட்கத்தில் யாரையும் சந்திப்பதையே தவிர்க்கிறாராம் ஸ்டேசி.
அமெரிக்காவில் இதெல்லாம் சகஜமப்பா என்கிறீர்களா...
ஆனால் பாடகி மேன்டி இந்த விஷயத்தை அப்படி எடுத்துக் கொள்ளவில்லை. "இது உண்மையிலேயே அவமானகரமான விஷயம்தான்" என்கிறார் மேன்டி.
கிளாடெட்டோ, இது எங்கள் தனிப்பட்ட உறவு குறித்த விவகாரம். கண்டவர்களும் இதில் குறுக்கிடுவதை விரும்பவில்லை என்கிறார்.
இது எப்படி இருக்கு!


Click it and Unblock the Notifications











