உள்ளாடை விளம்பரத்தில் மேகான் பாக்ஸ்

எம்போரியோ அர்மானி உள்ளாடை விளம்பரங்களில முன்பு விக்டோரியா பெக்காம் நடித்திருந்தார். தற்போது அந்த இடத்திற்கு கவர்ச்சிக் கன்னி மேகான் பாக்ஸ் வந்துள்ளார்.
மேலும், அர்மானி ஜீன்ஸ் ஷார்ட்ஸ் விளம்பரப் பிரசாரத்திலும் மேகான் இடம் பெறுவார்.
மேகான் இடம் பெறும் இந்த பத்திரிக்கை விளம்பரங்கள் ஜனவரி மாதம்தான் வெளியாகப் போகிறது. பெரும் பெரும் விளம்பரப் பலகைகளிலும் இது இடம் பெறப் போகிறதாம்.
அர்மானி புதிய உத்தியாக, தனது தயாரிப்பு பிராக்கள் மற்றும் பேன்டீஸ்களை பெண்களிடம் விற்பனை செய்யப் போவதில்லையாம். மாறாக, ஆண்களைக் குறி வைத்து அவர்களிடம் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாம். இதை உங்களது காதலிகள், தோழிகள், மனைவியருக்குப் பரிசாக அளியுங்கள் என்று விளம்பரப்படுத்தப் போகிறார்களாம்.
மேகான் பாக்ஸ் இந்த விளம்பரங்களில் நடிக்கவிருப்பதால் வர்த்தகம் பிய்த்துக் கொண்டு போகும் என்ற நம்பிக்கையில் உள்ளதாம் அர்மானி.


Click it and Unblock the Notifications











