மெக்கார்ட்னியும் 3 காதலிகளும்!

பால் மெக்கார்ட்னியும், முன்னாள் மாடல் அழகியான ஹீதர் மில்ஸும் சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்டனர். மிகப் பெரும் தொகை கொடுத்து இந்த விவாகரத்து சுபமாக முடிந்தது.
இந்த நிலையில் பால் மெக்கார்ட்னி ஒரே நேரத்தில் 3 பேருடன் புதுக் காதலை தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த நான்சி செவல், நடிகை ரோசன்னா அர்க்யூட், முன்னாள் ஒலிம்பிக் குதிரையேற்ற வீராங்கனை தான்யா லாரிகன் ஆகியோர்தான் மெக்கார்ட்னியின் மூன்று புதுக் காதலிகள்.
நான்சியுடன், கரீபிய தீவுகளில் கோடை விடுமுறையை மெக்கார்ட்னி கோலாகலமாக கொண்டாடியதை சில ஏடுகள் புகைப்படத்துடன் புட்டுப் புட்டு வைத்துள்ளன.
இதுகுறித்து மில்ஸ் கூறுகையில், மூன்று பெண்கள் அவருக்குத் தோழிகளாக கிடைத்துள்ளதாக அறிகிறேன். அவர்கள் மூன்று பேருக்கும் எனது வாழ்த்துக்கள், ஆசிர்வாதங்கள் என்று கூறி நக்கலடித்துள்ளார்.
'பால்' மாறிட்டீங்களே மெக்கார்ட்னி!


Click it and Unblock the Notifications











