கர்ப்பத்தை ஒப்புக் கொண்ட மின்னி!

By Staff

Minne Driver
நடிகை மின்னி டிரைவர் இதுவரை ரகசியமாக வைத்திருந்த தன் கர்ப்ப விவகாரத்தை வெளிப்படையாக அறிவித்துவிட்டார்.

38 வயதாகும் மின்னி டிரைவர் (அட... பெயரே அதாங்க) அமெரிக்காவின் பிரபல நடிகைகளுள் ஒருவர். குட்வில் ஹன்ட்டிங், போர்ட்ரெய்ட், தி டே டுடே உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருப்பவர்.

இரண்டு படங்களையும் ஏராளமான இசை ஆல்பங்களையும் கூட இவர் தயாரித்திருக்கிறார். இப்போதும் இவர் கைவசம் 4 புதிய படங்கள், 8 தொலைக்காட்சித் தொடர்கள் உள்ளன!

கடந்த மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு கிளினிக்கிற்கு சென்றுவிட்டு மின்னி திரும்பும்போது அங்கு பரபரப்புக்காகவே சுற்றிக் கொண்டிருக்கும் ப்ரீலான்ஸ் புகைப்படக்காரர்கள் கண்ணில் பட்டுவிட்டார். விடுவார்களா... எதற்காக மின்னி வந்தார் என தோண்டித் துருவி விசாரித்து உண்மையைக் கண்டுபிடித்து விட்டனர்.

மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் டாக்டர்கள், மின்னி செக்கப்புக்காகத்தான் வந்தார் என்பதைக் கூறிவிட்டனர். கடந்த வாரம் முழுவதும் அமெரிக்காப் பத்திரிகைகளில் இதுதான் முக்கியச் செய்தியாக இருந்தது.

இந் நிலையில், சில தினங்களுக்கு முன் மின்னி ஒரு தொலைக்காட்சிக்காக பேட்டி அளித்தார்.

அப்போது பேட்டி எடுத்த நிருபர் மின்னியின் கர்ப்பம் குறித்த கேட்டதற்கு, "ஆமாம், நான் கருவுற்றிருக்கிறேன். இந்த உண்மையச் சொல்ல எனக்கு பயமோ தயக்கமோ இல்லை. ஆனால் எதற்காகச் சொல்ல வேண்டும் என்றுதான் இத்தனை நாள் அமைதியாக இருந்தேன். தினமும் காலையில் மயக்கம், தலை சுற்றலால் நான் பாதிக்கப்பட்டதாக செய்தி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் பத்திரிகைக்காரர்கள்.

காலையில் மட்டுமா, மதியம், இரவு என மூன்று வேளையும் எனக்கு மயக்கம் வருகிறது. ஆனால் அது எனது தனிப்பட்ட விஷயம்... ஏன் இப்படி உங்கள் ஆட்கள் வம்புக்காக அலைகிறார்கள்..." என்றார் கடுப்பாக.

மின்னியின் கர்ப்பம் குறித்து ஏன் இத்தனை பரபரப்பாக செய்தி போடுகிறார்கள் என்கிறீர்களா... அவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. இந்த கர்ப்பத்துக்கு காரணம் யார் என்பதையும் அவர் கடைசிவரை சொல்லவேயில்லை!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X