பிரிட்னியின் கவர்ச்சி 'சர்க்கஸ்'!

By Staff

Britney Spears
அமெரிக்க பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் அடுத்த கவர்ச்சி ஆல்பம் தயார்... சர்க்கஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பம் கிட்டத்தட்ட ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு வெளியாகிறது.

தனது 27வது பிறந்த நாளையொட்டி வரும் டிசம்பர் 2ம் தேதி இந்தப் புதிய ஆல்பத்தை வெளியிடுகிறார் பிரிட்னி.

கடந்த ஆண்டு நவம்பரில் அவரது சூப்பர் ஹிடி ஆல்பம் பிளாக் அவுட் வெளியானது. இந்தப் ஆல்பத்தை கிட்டத்தட்ட நிர்வான போஸெல்லாம் கொடுத்து புரமோட் செய்தார் பிரிட்னி. செம ஹிட். ஆனால் அதனைத் தொடர்ந்து நிறைய ஆல்பங்களைத் தராமல், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டார். தனது மோசமான நடத்தைக்காக பெயரையும் கெடுத்துக் கொண்டார்.

ஆனால் சுதாரித்துக் கொண்டவர் அடுத்தடுத்து பல நல்ல விஷயங்களுக்காக பேசப்பட்டார். இந்த ஆண்டு அவருக்கு எம்டிவியின் மூன்று விருதுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அவருடைய பீஸ் ஆஃப் மி பாடல் அமெரிக்க ரேடியோவில் போன வாரம் ஒலிபரப்பாகி சக்கை போடு போட்டது.

வாழ்க்கையில் மிக இளம் வயதிலேயே நெருக்கடிகளைச் சந்தித்தவர் பிரிட்னி.

அவருடைய தாயிடமிருந்து விவாகரத்து பெற்ற அவரது தந்தை ஜோம்ஸ் ஸ்பியர்ஸ், கோர்ட் மூலமாக பிரிட்னியைக் கட்டுப்படுத்தும் உரிமையைப் பெற்றார். அதிலிருந்து மீண்டு வந்தவர், கெவின் பெடர்லைன் என்பவரிடம் கல்யாணம் என்ற பெயரில் மாட்டிக் கொள்ள, அவரிடமிருந்து மீண்டு வர கடும் போராட்டதைச் சந்தித்தார்.

இப்போது, ஓரளவு சர்ச்சைகளிலிருந்து விடுபட்டு தொடர்ச்சியாக ஹிட் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் பிரிட்னி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X