மேலும் 4 ஹாரி பாட்டர் படங்கள்!

உலகம் முழுவதும் பலரையும் கவர்ந்த கற்பனைக் கதாபாத்திரம் ஹாரி பாட்டர். சிறுவர்களை மட்டுமல்லாது, வயது வித்தியாசம் இல்லாமல் பல தரப்பினரையும் பாதித்த கேரக்டராக ஹாரி பாட்டர் விளங்குகிறது.
இங்கிலாந்து எழுத்தாளரான ஜே.கே.ரோலிங்கின் ஹாரி பாட்டர் கதைகள் படமாகவும் வந்துள்ளன. இந்த நிலையில் அவர் எழுதிய ஹாரி பாட்டர் அன்ட் தி டெத்லி ஹாலோஸ் நாவலை இரண்டாக பிரித்து இரு படங்களாக எடுக்கப் போகிறார்களாம்.
இதுவரை நான்கு ஹாரி பாட்டர் படங்கள் வந்துள்ளன. புதிதாக வரப் போகும் ஐந்து மற்றும் 6வது படங்களை டேவிட் யேட்ஸ் இயக்குவார். இப்படங்களுக்கு ஹாரி பாட்டர் அன்ட் தி டெத்லி ஹாலோஸ் பார்ட் 1, பார்ட் 2 என பெயரிட்டுள்ளனர்.
இதுதவிர 7வது படம் 2010ம் ஆண்டு நவம்பர் மாதமும், 9வது மற்றும் கடைசிப் படம் 2011 மே மாதமும் திரைக்கு வருமாம்.
பாட்டர் 'பார்ட்டி'களுக்கு நல்ல விருந்துதான்!
Comments


Click it and Unblock the Notifications